அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.79.24 ஆக உயர்வு

டெல்லி; அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 45 காசுகள் அதிகரித்து ரூ.79.24 ஆக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை ரூபாயின் மாற்று மதிப்பு டாலருக்கு நிகராக 22 காசுகள் உயர்ந்ததால் ஒரு டாலர் ரூ.79.69 ஆக இருந்தது. அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கி உள்ளதால் ரூபாயின் மாற்று மதிப்பு வெள்ளியன்று 45 காசுகள் உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை ஒரு டாலர் ரூ.79.69 என்ற அளவில் இருந்த மாற்று மதிப்பு இன்று ஒரு டாலர் ரூ.79.24 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.