குஜராத்தில் போதை பொருள் மாபியாக்களை பாதுகாப்பது யார்? – ராகுல் காந்தி கேள்வி!

குஜராத் மாநிலத்தில், போதைப் பொருள் மாபியா கும்பலை பாதுகாப்பது யார் என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர சிங் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சமீபத்தில் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தில் 42 பேர் உயிரிழந்தனர்.

97 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. கள்ளச் சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வறண்ட மாநிலமான குஜராத்தில், கள்ளச் சாராயம் குடித்ததால் பல குடும்பங்கள் அழிந்து கிடக்கின்றன. பில்லியன் கணக்கான மதிப்புள்ள போதைப் பொருள்களும் அங்கிருந்து தொடர்ந்து கைப்பற்றப்படுகின்றன. மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோர் பிறந்த மண்ணில், கண்மூடித்தனமாக போதை வியாபாரம் செய்யும் இவர்கள் யார் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு அளிக்கின்றன?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.