3 மாதத்தில் ரூ.1992 கோடி நஷ்டம்.. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதலீட்டாளர்கள் கவலை!

நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) இன்று அதன் ஜூன் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.

அதன் படி நிகர நஷ்டம் 66.46% குறைந்து, 1992.53 கோடி ரூபாயாக நஷ்டம் கண்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பாளரான இந்தியன் ஆயில் நிறுவனம் உள் நாட்டு சந்தையில் தள்ளுபடி விலையில் எரிபொருட்களை விற்பனை செய்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

ரூ.50,000 டெபாசிட்.. அஞ்சலகத்தின் MIS திட்டத்தில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்.. !

எகிறிய வருவாய்?

எகிறிய வருவாய்?

கடந்த ஆண்டில் இந்த பொதுத்துறை நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த ஆண்டில் 5941.37 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதம் 62.47% அதிகரித்து, 2.51 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் இது இன்னும் ஆய்வில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே கடந்த ஆண்டில் இதன் வருவாய் விகிதம் 1.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தான் காரணமா?

இது தான் காரணமா?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்ட போதிலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யவில்லை. இந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு தொடர்ந்து 100 டாலர்களுக்கு மேலாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சுத்திகரிப்பு மார்ஜின்
 

சுத்திகரிப்பு மார்ஜின்

இந்த நிறுவனத்தின் சராசரி சுத்திகரிப்பு மார்ஜின் (GRM) விகிதமானது ஜூன் காலாண்டில், 31.81 டாலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டில் பேரலுக்கு 6.58 டாலர்களாக இருந்தது. இது ஒரு பேரலுக்கு 25.34 டாலர்களாக அதிகரித்துள்ளது.

இன்றைய பங்கு விலை?

இன்றைய பங்கு விலை?

என் எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.25% அதிகரித்து, 72.95 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இதன் உச்சம் 73.25 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 72.25 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்சவிலை 94.33 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 67.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.18% அதிகரித்து, 72.95 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இதன் உச்சம் 73.25 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 72.10 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்சவிலை 94.50 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 67.73 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

indian oil corp announces net loss of Rs.1992 crore in June quarter

indian oil corp announces net loss of Rs.1992 crore in June quarter/3 மாதத்தில் ரூ.1992 கோடி நஷ்டம்.. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதலீட்டாளர்கள் கவலை!

Story first published: Friday, July 29, 2022, 19:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.