பயங்கரவாதிகளுடன் தொடர்பு 3 பேரை கைது செய்த என்.ஐ.ஏ.,| Dinamalar

துமகூரு, : ஐ.சி.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக பட்கல்லில் இருவரும், துமகூரில் ஒருவரும் என மூன்று பேரை, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஐ.சி.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் கர்நாடகாவில் இருப்பதாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பெங்களூரு, டில்லியை சேர்ந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் மூன்று நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் இரவு, உத்தர கன்னடாவின் பட்கல்லில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் ஒருவரான அப்துல் முக்தாதிர், 30 என்பவர், சமூக வலைதளங்களில் ஐ.சி.எஸ்., உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான கருத்துகள், லைக், கமென்ட்கள் போட்டு வந்தார்.இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், பட்கல்லில் இரண்டு நாட்களாக அவரது நடமாட்டத்தை கண்காணித்தனர். அதன்பின், அவரை கைது செய்தனர். மற்றொருவரும், பயங்கரவாத இயக்கத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவு தெரிவித்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துமகூரில் உள்ள எச்.எம்.எஸ்., யுனானி மருத்துவ கல்லுாரியில் படித்த, மஹாராஷ்டிராவை சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவருக்கும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து இவரை நேற்று கைது செய்தனர். இவர், மரளூர் தின்னை என்ற இடத்தில் தங்கியிருந்து கல்லுாரியில் படித்து வந்தார்.இந்த கல்லுாரி கட்டடம், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., ரபிக் அகமதுக்கு சொந்தமானது. மும்பையை சேர்ந்தவர்கள், இந்த கல்லுாரியை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.