டுவிட்டருக்கு எதிராக இந்தியாவில் தாக்கல் செய்த வழக்கு விவரங்களை டுவிட்டர் வெளியிடத் தவறியதாக எலான் மஸ்க் குற்றச்சாட்டு!

வாஷிங்டன்,

இந்திய அரசுக்கு எதிரான வழக்கை டுவிட்டர் வெளியிடத் தவறியதாக எலோன் மஸ்க் கோர்ட்டில் கூறியுள்ளார்.

உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான டுவிட்டரை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ஏற்படுத்தினார்.

ஆனால், டுவிட்டரில் உள்ள கணக்குகளில் 5 சதவீதம் போலியானவை அல்லது ஸ்பேம்கள் என்று கூறி டுவிட்டரின் உண்மைத்தன்மையை மதிப்பாய்வு செய்ய அவரது குழுவை ஏற்படுத்தினார். அதுவரை டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தார். அதன்பின்னர் டுவிட்டரை வாங்கப்போவதில்லை என்று அறிவித்தார்.

இதனை எதிர்த்து மஸ்க்கிற்கு எதிராக டுவிட்டர் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு அக்டோபர் 17-ம் தேதி மறுவிசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், டெலாவேர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட டுவிட்டருக்கு எதிரான மஸ்க் தரப்பு வழக்கில் இந்த தகவலை மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.மேலும், டுவிட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மஸ்க்கை ஏமாற்றும் வேலை நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

கோர்ட்டில் தாக்கல் செய்த மஸ்க்கின் ஆவணத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசாங்கத்திற்கு எதிரான ஆபத்தான வழக்குகளை வெளியிடத் தவறியதன் மூலம், டுவிட்டரின் மூன்றாவது பெரிய சந்தையாக உள்ள இந்திய சந்தையை டுவிட்டர் ஆபத்தில் தள்ளி உள்ளது. இந்தியாவின் உள்ளூர் சட்டத்தை டுவிட்டர் பின்பற்ற வேண்டும் என்று மஸ்க் கூறியுள்ளார்.

இவற்றை நிராகரித்த டுவிட்டர், மஸ்க்கின் குற்றச்சாட்டுகளின் உண்மை குறித்த நம்பிக்கையை உருவாக்க போதுமான அறிவு அல்லது தகவல் இல்லை என்று மறுத்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடக இடுகைகளை ஆய்வு செய்ய அரசாங்கத்தை அனுமதிக்கும் சில விதிகளை விதித்தது. இது தகவல்களை அடையாளம் காண அரசாங்கத்தை அனுமதிக்கிறது மற்றும் இணங்க மறுத்த நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரலாம் என்ற விதிகளை கொண்டுவந்தது.

இதற்கு இணங்க மறுப்பு தெரிவித்த டுவிட்டர், இது தொடர்பாக ஜூலை மாதம் கர்நாடகா ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், அரசு சட்டவிரோதமானதாகக் கருதும் உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கான இந்திய அரசாங்க உத்தரவுகளுக்கு இணங்கினால் டுவிட்டரின் இந்திய வணிகம் மூடப்படும் அபாயம் உள்ளதாக டுவிட்டர் தெரிவித்தது.

இதனைக் குறிப்பிட்டு, இந்திய அரசாங்கத்திற்கு எதிரான வழக்கை டுவிட்டர் வெளியிடத் தவறியதற்கு மஸ்க் எதிர்ப்பு தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.