20 ஓவர் அணியில் எப்போதும் இடமில்லை: இந்திய பவுலருக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி

T20 World Cup 2022: டி20 உலகக் கோப்பை 2022க்கு முன், இந்திய அணியின் தேர்வுக் குழு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்த டி20 உலகக் கோப்பையில் அணியில் இந்திய அணியின் நட்சத்திர மற்றும் மூத்த பந்துவீச்சாளர் இடம்பெற மாட்டார் என்பதை முட்கூட்டியே முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டியிருந்தது. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில், சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. 

விரைவில் டி20 உலகக் கோப்பையை நடக்க இருக்கும் நிலையில், முன்பே ஒரு வீரரை வெளியே உட்கார வைக்க தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த வீரர் 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றார்.

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பல போட்டிகளில் இந்தியாவுக்காக சிறப்பாக பந்துவீசியுள்ளார். நட்சத்திர பந்துவீச்சாளராகவும் இருக்கும் அவரை 20 ஓவர் இந்திய அணியில் இருந்து தேர்வாளர்கள் கழற்றிவிட முடிவு செய்துவிட்டனர். 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இந்த ஆண்டு உலகக் கோப்பையில் இருந்தும் விலக்கவும் முடிவு செய்திருக்கின்றனர். இதுகுறித்து முகமது ஷமியிடமும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டதாம்.

மேலும் படிக்க | சர்ச்சையில் சிக்கிய ஷகிப் அல்ஹசன்; விசாரணைக்கு உத்தரவு

தேர்வுக்குழு நிர்வாகி 

இன்சைட் ஸ்போர்ட்டிடம் பேசிய தேர்வுக்குழு கமிட்டியின் உறுப்பினர் ஒருவர், “முகமது ஷமியை டெஸ்ட் போட்டிக்கு தயார்படுத்த வேண்டும். அதனால் டி20 கிரிக்கெட்டுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அவரது பணிச்சுமை மேலாண்மை குறித்து அவருடன் உரையாடினோம். இப்போதும் அதேதான் நடக்கப் போகிறது. தற்போது டி20 திட்டம் எதுவும் இல்லாததால் இளம் பந்து வீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடைசி வாய்ப்பு 

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் முகமது ஷமி அணியில் இருந்தார். அப்போது, அவருடைய பந்துவீச்சு சிறப்பாக இருக்கவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவருடைய பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. இதனால், அந்தப் தொடருக்குப் பிறகு 20 ஓவர் இந்திய அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை. இதுவரை இந்திய அணிக்காக 17 போட்டிகளில் விளையாடியிருக்கும் முகமது ஷமி, 18 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க | 9 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த பிரபல வீரர்! வைரலாகும் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.