NRI வாழ்க்கை மாற்றப்போகும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்.. முழு விபரம்..!

சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் அதிகம் வசிக்கும் நாட்டவர்களில் இந்திய முதன்மையாக இருக்கும் நிலையில் ஆர்பிஐ என்ஆர்ஐ-களுக்கு முக்கியமான சேவையை அளிக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட நிதி சேவைகள் குறித்த அறிவிப்பில் வெளிநாடுகளில் இருக்கும் NRI-கள் இந்தியாவில் அவர்களின் வீடு அல்லது பெற்றோர்கள், உறவினர் வசிக்கும் வீட்டிற்கான மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் மற்றும் பிற அனைத்து யூடிலிட்டி கட்டணங்களை வெளிநாட்டில் இருந்துகொண்டே செலுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்தச் சேவையைத் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (BBPS) வாயிலாகச் செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் அக்டோபர் 21 முதல் புதிய விசா விதிகள்.. என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

 பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்

பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்

NPCI Bharat BillPay Ltd. (NBBL) நிறுவனத்திற்குச் சொந்தமான, தனது முழுகட்டிப்பாட்டில் இயக்கப்படும் ஒரு நிறுவனம் தான் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (BBPS). இந்தியாவில் பில் பேமெண்ட் அனுபவத்தை மக்களிடத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றியுள்ளது. கரண்ட் பில், தண்ணீர் பில் என அனைத்து கட்டணங்களையும் செலுத்தும் சேவை தான் இந்தப் பில் பேமெண்ட்.

யூபிஐ போல...

யூபிஐ போல…

இந்தியாவில் வங்கிகள் மத்தியிலான பேமெண்ட்கள் யூபிஐ மூலம் எப்படி நிலையான தரத்திற்கும் கொண்டு வரப்பட்டதோ, அதேபோலத் தான் BBPS அறிமுகத்திற்குப் பின்பு பில் செலுத்தும் அனுபவம், முறையை இந்தியாவில் தரப்படுத்தப்பட்டது அதாவது standardise செய்யப்பட்டது.

பில் பேமெண்ட்
 

பில் பேமெண்ட்

இந்தப் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் வாயிலாக மின்சாரம், டெலிகாம், DTH, கேஸ், தண்ணீர் பில் போன்ற பல யூனிடிலிட்டி அதாவது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சேவைக்களுக்கான கட்டணம் செலுத்த வழிவகுக்கிறது.இதேபோல் இன்சூரன்ஸ் ப்ரீமியம், மியூச்சவல் பண்ட்ஸ், ஸ்கூல் பீஸ், இன்ஸ்டியூஷன் பீஸ், கிரெடிட் கார்டு, பாஸ்டேக் ரீசார்ஜ், உள்ளூர் வரி, ஹவுசிங் சொசைட்டி கட்டணம் எனப் பலவற்றை ஒற்றைச் சாளரம் முறையில் செலுத்த முடியும்.

8 கோடி பரிவர்த்தனை

8 கோடி பரிவர்த்தனை

இது மட்டும் அல்லாமல் BBPS சென்டரலைய்டு வாடிக்கையாளர் குறை தீர்க்கும் நெறிமுறை, சீரான இயங்குதளத்தை மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகிறது. இத்தளத்தில் 20,000 க்கும் மேற்பட்ட பில்லர்கள் அதாவது கட்டணங்களைப் பெறுவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு மாத அடிப்படையில் எட்டு கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் இத்தளத்தில் வாயிலாகச் செயல்படுத்தப்படுகின்றன.

NRI-களுக்கு விரிவாக்கம்

NRI-களுக்கு விரிவாக்கம்

இந்தச் சேவை தற்போது இந்தியாவில் இருக்கும் அமைப்புகளும், மக்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளது, இந்தச் சேவையைத் தான் ஆர்பிஐ கவர்னர் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அளிக்கவும் முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.

நன்மை..

நன்மை..

இந்தச் சேவை மூலம் வெளிநாட்டில் வாழும் நபரின், குடும்பங்கள் இந்தியாவில் இருக்கும் பட்சத்தில் அனைத்து சேவைகளையும், கட்டணங்களையும் தாங்களே செலுத்தி அவர்களைப் பாதுகாப்பாக வைக்க முடியும். குறிப்பாக மின்சாரம், டெலிகாம், DTH, கேஸ், தண்ணீர், உள்ளூர் வரி, ஹவுசிங் சொசைட்டி கட்டணம் போன்ற அத்தியாவசியமான சேவைகளுக்குப் பணம் செலுத்த முடியும் என்பதால் பெரிய அளவில் பலன் அளிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is Bharat Bill Payments System? How it changes NRI life so easy?

What is Bharat Bill Payments System? How it changes NRI life so easy? NRI வாழ்க்கை மாற்றப்போகும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்.. முழு விபரம்..!

Story first published: Friday, August 5, 2022, 15:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.