அடித்தது ஜாக்பார்ட்! கேஎல் ராகுல் இடத்தில் ஹர்திக் பாண்டியா?

வரும் 2022 ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.  கேஎல் ராகுல் கொரோனா தொற்று காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட வில்லை.  இந்நிலையில் கேஎல் ராகுலிடமிருந்து இந்திய அணியின் துணை கேப்டன் பதவி ஹர்திக் பாண்டியாவிடம் செல்லலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  “துணை கேப்டன் பதவிக்கு நிர்வாகம் ஒருவரின் பெயரைப் பற்றி விவாதிக்கிறது. அவர் கடந்த காலத்தில் எங்களுக்கு நல்ல முடிவுகளைத் தந்ததால் அது ஹர்திக் பாண்டியாவாக இருக்கலாம். 

அவர் தனது தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2022ல் சாம்பியன் ஆக்கினார். அவர் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  இந்த பதவிக்கு ஒரு ஆல்-ரவுண்டரை நாங்கள் பெயரிட விரும்புகிறோம், தற்போதைய சூழ்நிலையில், ஹர்திக் இந்த பதவிக்கு தகுதியானவர், “என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக, இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்ட பிறகு, ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க | இந்திய அணியில் வாய்ப்பு இல்லை! வெளியேறும் ஐபிஎல் கேப்டன்!

 

ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஐ தொடருக்கு சற்று முன்பு ராகுலுக்கு இடுப்பு காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மீண்டும் பயிற்சியைத் தொடங்கினார். டிசம்பர் 2021ல், காயம் காரணமாக ரோஹித் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, அவர் இந்தியாவின் டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.  கேஎல் ராகுல் தனது கடைசியாக பிப்ரவரி 2022-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடினார்.  இதற்கிடையில், பாண்டியா 2022-ல் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் பெற்றார்.  கேப்டனாக அவர் தனது முதல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2022 பட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.  15 ஆட்டங்களில் 44.27 சராசரியில் 487 ரன்கள் மற்றும் எட்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரின் போது இந்திய துணைக் கேப்டனாக பாண்டியா தனது முதல் அனுபவத்தைப் பெற்றார், இந்த தொடர் 2-2 என டிராவில் முடிந்தது.  அயர்லாந்தில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பாண்டியா நியமிக்கப்பட்டு தொடரை 2-0 என வென்றனர்.  இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பாட்டார். நான்கு இன்னிங்ஸ்களில் 40.75 சராசரியில் 163 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் 11 விக்கெட்டுகளை எடுத்தார்.  தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக உள்ளார்.

மேலும் படிக்க | 9 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த பிரபல வீரர்! வைரலாகும் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.