சென்னை: இரவின் நிழல் படத்துக்கு கிடைத்த வெற்றியின் காரணமாக நடிகர் பார்த்திபன் படு குஷியாகி ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்கிற அறிவிப்புடன் வெளியான இரவின் நிழல் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.
இந்நிலையில், ஆடி கூழ் ஊற்றி.. அடுத்த படத்திற்கு ரெடி ஆகிறான் ப்ளடி என பார்த்திபன் போட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது.
உலகின் முதல் தான்
இரவின் நிழல் திரைப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் இல்லை என ப்ளூ சட்டை மாறன் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இந்த படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் தான் என அடித்துக் கூறி வருகிறார்.

வசூல் வேட்டை
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை பார்க்க ஒத்த ஆளு கூட தியேட்டரில் இல்லையே என கவலைப்பட்ட நிலையில், இரவின் நிழல் படம் திரையிட்ட தியேட்டர்களுக்கு எல்லாம் சென்று நடிகர் பார்த்திபன் ரசிகர்கள் மத்தியில் பேசும் வீடியோக்களை வெளியிட்டு அக மகிழ்ந்துள்ளார். 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 25 முதல் 30 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பார்த்திபன் ஆட்டம்
சமீபத்தில், போட்டோஷூட் ஒன்றை நடத்திய பார்த்திபன் கூடவே அந்த இடத்தில் போட்ட ஆட்டத்தையும் வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நெகட்டிவிட்டியை பரப்பியவர்களுக்கு புகைச்சலை கொடுத்துள்ளார். இரவின் நிழல் படம் பார்த்திபனுக்கு லாபத்தைக் கொடுத்த நிலையில், அடுத்த வித்தியாசமான முயற்சியை ஆரம்பிக்க களமிறங்கி விட்டேன் என்பதை அறிவிக்கவே இப்படியொரு ஆட்டம்.

ஆடி கூழ்
“ஆடி
ஆடி
ஆடி
ஆடி கூழ் ஊற்றி,
Cool-ஆய் ஆடி
ஆடி
நாடி
நரம்பெல்லாம்
எனர்ஜி நல்லா
கூடி
கூடி
கூடி
ரெடி
ஆகிறான்
ப்ளடி
அடுத்தப்
படத்திற்கு.
எப்டி?” என ட்வீட் போட்டு தனது நடன வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

விலங்குகள் மட்டும் நடிக்கும் படமா
தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை கையில் எடுத்து புதிய பாதையிலேயே பயணித்து வரும் பார்த்திபன் அடுத்ததாக விலங்குகள் மட்டுமே நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் அடுத்த பட அப்டேட்டை பார்த்திபன் அறிவிப்பார் என தெரிகிறது.