குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்கை பதிவுகளால் உருவான தேசியக்கொடி

நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடும் வகையில் வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென மத்திய,மாநில, அரசுகள் கோரிக்கை விடுத்து விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளி நிர்வாகத்தினர் 75 ஆவது சுதந்திர தின விழாவை மாறுபட்ட வகையில் கொண்டாடிட முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து மழலையர் பள்ளியில் படிக்கும் 2 வயது முதல் 6 வயதுடைய 100க்கும் மேற்பட்ட மழலை குழந்தைகளை கொண்டு,12 அடி உயரமும், 36 அடி நீளமும் கொண்ட மிகப்பெரிய வெள்ளை நிற கொடியில் மழலை குழந்தைகளின் பிஞ்சு கைகளில் பச்சை, ஆரஞ்சு, நீலம் வண்ணங்களை தடவி சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளங்கை அச்சு பதிவின் மூலம் வெள்ளைக் கொடியில் மூன்று மணி நேரத்தில் தேசியக் கொடியை தயாரித்து சாதனை செய்தனர்.

மேலும் படிக்க |  செஸ் விளையாட்டில் ராணிக்கு எப்படி வந்தது இவ்வளவு அதிகாரம் ? – ஓர் சுருக் ‘ஃப்ளாஷ்பேக்’!

பச்சிளம் குழந்தைகள் உள்ளங்கை பதிவினால் தயாரித்த இந்த தேசியக் கொடியை கலாம் சாதனை புத்தக பதிவாளர்கள் கண்காணித்து அதனை சாதனை புத்தகத்தில் பதிவு செய்தனர். மூன்று மணி நேரத்தில் 36 அடி தேசிய கொடியை செய்து சாதனை செய்த பள்ளி நிர்வாகத்திற்கும் பங்கு கொண்ட மழலை குழந்தைகளுக்கும் கலாம் சாதனை புத்தகம் சார்பில் அதற்கான சான்றிதழ்களும் கேடயங்களும் பரிசாக வழங்கப்பட்டது.

தேசியக்கொடி உருவாக்கிய நிகழ்வு கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதை அறிவித்தவுடன் மழலை குழந்தைகளும் பள்ளி நிர்வாகத்தினரும் தேசிய கொடிகளை அசைத்து வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் என கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்: வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்த 7 வயது சிறுமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.