வேதாரண்யம் அருகே ராட்சத குழாய்களுடன் வந்த 25 லாரிகளால் விடிய விடிய பரபரப்பு: ஹைட்ரோ கார்பன் பணிக்கு வந்ததாக கருதி விவசாயிகள் திரண்டனர்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடியில் துண்டில் முள் வளைவு அமைக்கும் பணி கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கற்கள் கொண்டு வந்து ஆறுகாட்டுத்துறை கடலில் கொட்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வடமாநில பதிவு எண் கொண்ட 25 லாரிகள் ராட்சத குழாய்களுடன் நேற்று நள்ளிரவு வேதாரண்யம் அடுத்த ஆதனூர் அருகே சாலை ஓரம் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தது.இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஹைட்ரோகார்பன், அல்லது ஓ.என்.ஜி.சி பணிக்கு வந்திருப்பதாக சமூக வளைதளங்களில் பதிவிட்டனர். இதனால் வேதாரண்யம் பகுதி முழுவதும் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் பீதி கிளம்பியது. விவசாய சங்கத்தினர் சிலர் அங்கு திரண்டனர். ராட்சத குழாய்களை இறக்கவிடமால் போராட்டம் நடத்த முடிவு செய்து மற்ற விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்து வேதாரண்யம் போலீசார், மற்றும் உளவுத்துறை போலீசார் லாரி நின்ற இடத்திற்கு சென்று விசாரித்தனர். போலீசார் விசாரித்ததில் இந்த குழாய்கள் ஆறுகாட்டுத்துறை துண்டில் முள்வளைவு அமைக்கும் பணிக்கு வந்தது என உறுதிசெய்தனர். இதன்பிறகு இத்தகவல் சமூக வளைதளங்களில் பதிவிடப்பட்டது.ராட்சத குழாய் வந்ததால் இரவு 11 மணிக்கு தொடங்கிய பரபரப்பு அதிகாலை 5 மணி வரை நீடித்தது. உண்ைம நிலவரம் தெரிந்த பிறகு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.