ஏர்டெல் மீது 3 கோடி புகார்; வோடாஃபோன் ஐடியா மீது 2 கோடி புகார்! மத்திய அரசு தகவல்!

கடந்த நிதியாண்டில் மொபைல் ஃபோன் சேவைகள் தொடர்பாக சுமார் 5 கோடிக்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 54 சதவீதம் புகார்கள் ஏர்டெல் நிறுவனத்தின் மீது மட்டுமே பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2 கோடியே 99 கோடி புகார்கள் ஏர்டெல் மீது கூறப்பட்டுள்ளதாகவும் வோடாஃபோன் ஐடியா மீது 2 கோடியே 17 லட்சம் புகார்கள் கூறப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
Jio vs Airtel vs Vi: Who Is Providing Better Plan At Rs 199?
ரிலையன்ஸ் ஜியோ மீது 25 லட்சத்து 80 ஆயிரம் புகார்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். பிஎஸ்என்எல் மீது 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் புகார் கூறியுள்ளனர். மொத்தமாக 5.5 கோடி புகார்கள் வாடிக்கையாளர்களால் புகார் மையங்களில் உள்ள ஆபரேட்டர்களின் ஹெல்ப் லைன் எண்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Airtel, Jio, Vi 'Work From Home' Prepaid Plans Under Rs. 300 - Gizbot News

“புகார் மையங்களில் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்களால் சரிசெய்யப்படுகின்றன. அவ்வாறு புகார்கள் தீர்க்கப்படாவிட்டால் தொலைதொடர்பு துறையின் மக்கள் குறைதீர் பிரிவை அணுகி புகார் அளிக்கலாம். அங்கு பெறப்படும் அனைத்து புகார்களும் பொதுக் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPGRAMS) போர்டல் மூலம் கண்காணிக்கப்பட்டு தீர்க்கப்படும். கடந்த நிதியாண்டில் இந்த போர்டலில் 58,911 புகார்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றில் 58,224 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன.” என்றார் அமைச்சர் தேவுசிங் சவுகான்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.