முகேஷ் அம்பானி, அனில் அம்பானி மோதல்.. மறக்க முடியாத 2002.. என்ன நடந்தது..?!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் ரிலையன்ஸ் குழுமம் இந்தியாவில் எந்தொரு நிறுவனமும் பார்த்திடாத வகையில் தாராளமயமாக்கல்-க்கு முன்பும் பின்பும் வெற்றி பாதையில் இருப்பது மட்டும் அல்லாமல் முன்னோடியாகவும் உள்ளது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளர்களான அம்பானி குடும்பத்தில் 2002ல் நடந்த சம்பவம் இன்றளவும் பல முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்திற்குப் பாடமாக உள்ளது, ஏன் அம்பானி குடும்பத்திற்குக் கூட இது மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

மோடி அரசின் புதிய ONDC நெட்வொர்க்-ல் இணைந்த ரிலையன்ஸ் நிறுவனங்கள்.. இனி வேற லெவல்..!

மிடில் கிளாஸ் குடும்பம்

மிடில் கிளாஸ் குடும்பம்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் ரிலையன்ஸ் குரூப் 1965ல் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்த திருபாய் அம்பானி துவங்கியது என்றால் இன்றளவும் வியக்கவைக்கும் ஒரு விஷயமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இன்றளவும் மிடில் கிளாஸ் மக்கள் புதிய வர்த்தகத்தைத் துவங்க போராடி வருகின்றனர்.

திருபாய் அம்பானி மறைவு

திருபாய் அம்பானி மறைவு

அப்படித் திருபாய் அம்பானி 1960களில் துவங்கிய ரிலையன்ஸ் குரூப் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் 69 வயதில் அவர் மறைந்த போது முக்கியமான பிரச்சனையும் விட்டு சென்றார் திருபாய் அம்பானி.

உயில்
 

உயில்

ரிலையன்ஸ் குரூப்-ஐ எப்படி வளர்க்க வேண்டும், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என அனைத்தையும் செய்த திருபாய் அம்பானி தன்னுடைய மகன்களுக்கான உயில் எழுதி வைக்காமல் போனது பெரும் பிரச்சனையாக இந்திய வர்த்தகச் சந்தையில் உருவானது.

 ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் மாதம்

2002 ஜூலை மாதம் திருபாய் அம்பானி உயில் எழுதி வைக்காமல் மறைந்த நிலையில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி மத்தியில் திருபாய் அம்பானி மறைந்த சில நாட்களிலேயே கிட்டதட்ட ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது, நீண்ட காலமாகப் பங்குச்சந்தை முதலீடு செய்து வருபவர்கள் கட்டாயம் மறக்க முடியாது.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

அன்றும் சரி இன்றும் சரி ரிலையன்ஸ் முதலீட்டாளர்களின் செல்ல பிள்ளை தான். இதற்கு முக்கியக் காரணம் ரிலையன்ஸ் தாராளமயமாக்கல்-க்கு முன்பு இந்திய போட்டிகளைச் சமாளித்து வேகமாக வளர்ந்ததைக் காட்டிலும் தாராளமயமாக்கல்-க்கு பின்பு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் குவிந்த போதும் வேகமாக வளர்ந்தனர்.

பழைய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள்

பழைய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள்

இதைச் செய்ய முடியாமல் பல பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் வீழ்ந்துள்ளது. இன்றும் பல பழமையான வர்த்தகச் சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது கண்முன்னே தெரிகிறது. அப்படிப் பார்த்தால் டாடா குழுமம் போல் சில வர்த்தகக் குழுமங்கள் மட்டுமே தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.

முக்கியப் பதவிகள்

முக்கியப் பதவிகள்

சரி, நாம விஷயத்துக்கு வருவோம், திருபாய் அம்பானி மறைந்த சில வாரத்திலேயே ரிலையன்ஸ் குரூப்-ன் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் ஆக முகேஷ் அம்பானி நியமிக்கப்பட்டார். அனில் அம்பானி துணை தலைவராக நியமிக்கப்பட்டார். முகேஷ் அம்பானி மூத்தவர் என்பதால் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது எனக் கணிக்கப்பட்டது.

 பிரச்சனை சூடுபிடித்தது

பிரச்சனை சூடுபிடித்தது

இந்த நியமனத்திற்குப் பின்பு வர்த்தகம் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் இயங்க துவங்கியது, ஆனால் நிர்வாகத்திலும், நிர்வாகக் குழுவிலும் ஒவ்வொரு நாளும் பெரும் பிரச்சனையாகவே இருந்தது. இந்தப் பிரச்சனை வெளியில் தெரியாத காரணத்தால் ரிலையன்ஸ் பங்குகளும் இயல்பான தடுமாற்றங்கள் உடன் வர்த்தகமாகி வந்தது.

அடிதடி சண்டை அளவு

அடிதடி சண்டை அளவு

2 வருடமாக அடிதடி சண்டை அளவை எட்டும் நிலையில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது, இருவரும் மாறி மாறிச் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒருவரை ஒருவர் மீது குற்றம்சாட்டுவது, குறைகூறுவது என்பதைத் தாண்டி பிரதமருக்குக் கடிதம் எழுதும் நிலைக்குச் சென்றது.

கோகிலாபென் அம்பானி

கோகிலாபென் அம்பானி

இந்த நிலையில் பிரச்சனைக்கு முடிவு கட்ட திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் அம்பானி இருவரையும் அழைத்துப் பேச்சுவார்த்தையில் நிறுவனங்கள், சொத்துக்கள் பிரிக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் அதிகாரிகள் மட்டும் அல்லாமல் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு மதிப்பீட்டு மற்றும் நிதியியல் சேவை நிறுவன அதிகாரிகளும் இருந்தனர்.

முகேஷ் அம்பானி - சொத்துப் பிரிப்பு

முகேஷ் அம்பானி – சொத்துப் பிரிப்பு

இதில் முகேஷ் அம்பானிக்கு பெட்ரோகெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு தேடல், சுத்திகரிப்பு, டெக்ஸ்டைல் ஆகிய வர்த்தகங்களும், வர்த்தகப் பிரிவுகளும் சென்றது. இதை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எனப் பெயர் மாற்றப்பட்டு மொத்த நிர்வாக உரிமையை முகேஷ் அம்பானி கைகளுக்கு வந்தது.

அனில் அம்பானி - சொத்துப் பிரிப்பு

அனில் அம்பானி – சொத்துப் பிரிப்பு

இதேபோல் அனில் அம்பானி அப்போதைய காலகட்டத்தில் மிகவும் செழிப்பாக இருந்த நிதியியல் சேவை வர்த்தகம், மின்சாரம், எண்டர்டெயின்மென்ட் மற்றும் டெலிகாம் வர்த்தகப் பிரிவுகள் அளிக்கப்பட்டது. இதை அனில் திருபாய் அம்பானி குரூப் சுருக்கமாக ADAG குரூப் என அழைக்கப்பட்டது.

அம்பானிகளின் இன்றைய சொத்து மதிப்பு

அம்பானிகளின் இன்றைய சொத்து மதிப்பு

திருபாய் அம்பானி உருவாக்கிய ரிலையன்ஸ் குரூப்-ஐ கோகிலாபென் அம்பானி தலைமையில் இருவருக்கும் பிரிக்கப்பட்ட போது அனில் அம்பானி சொத்து மதிப்பு தான் அதிகமாக இருந்தது. ஆனால் இன்று முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 92.3 பில்லியன் டாலர், அனில் அம்பானி சொத்து மதிப்பு ஜீரோ.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh and Anil Ambani fight unforgettable 2002; What happen after dhirubhai ambani died

Mukesh and Anil Ambani fight unforgettable 2002; What happen after dhirubhai ambani died முகேஷ் அம்பானி, அனில் அம்பானி மோதல்.. மறக்க முடியாத 2002.. என்ன நடந்தது..?!

Story first published: Saturday, August 6, 2022, 14:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.