ரெசிஷனில் தள்ளப்படும் பிரிட்டன்.. 27 வருடத்திற்கு பின்பு எடுத்த முடிவு..!

வல்லரசு நாடுகள் உண்மையில் வல்லரசு இல்லை என்பதைக் கொரோனா தொற்றின் போது பார்த்ததைத் தொடர்ந்து தற்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வரும் வேளையில் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அமெரிக்கா-வின் ஐரோப்பா, பிரிட்டன், இந்தியா, கொரியா உட்படப் பல நாடுகள் பணவீக்கத்தைச் சமாளிக்க முடியாமல் ரெசிஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக வட்டியை உயர்த்தி வருகிறது.

இந்நிலையில் பிரிட்டன் கடந்த 27 வருடத்தில் செய்திடாத வகையில் ஒரு சம்பவத்தைச் செய்துள்ளது.

முகேஷ் அம்பானி, அனில் அம்பானி மோதல்.. மறக்க முடியாத 2002.. என்ன நடந்தது..?!

வட்டி உயர்வு

வட்டி உயர்வு

27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியதால் இங்கிலாந்து பொருளாதாரம் விரைவில் மந்த நிலைக்கு விழும் அதாவது ரெசிஷனில் விழும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்து எச்சரித்துள்ளது.

மூன்று மாதங்கள்

மூன்று மாதங்கள்

2022 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் பிரிட்டன் பொருளாதாரம் வேகமாகச் சுருங்கும் என்றும் 2023 இறுதி வரை சுருங்கிக் கொண்டே இருக்கும் என்றும் பேங்க் ஆப் இங்கிலாந்து கணிக்கப்பட்டுள்ளது.

வேறு வழி இல்லை
 

வேறு வழி இல்லை

கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி கூறுகையில் பிரிட்டன் நாட்டு மக்களின் லிவ்விங் காஸ்ட் குறைப்பது கடினம் என்று தனக்குத் தெரியும், ஆனால் அது வட்டி விகிதங்களை உயர்த்தவில்லை என்றால் அது தற்போதைய நிலையை இன்னும் மோசமாகிவிடும் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

பாங்க் ஆஃப் இங்கிலாந்து

பாங்க் ஆஃப் இங்கிலாந்து

இங்கிலாந்து நாட்டின் மத்திய வங்கியான பாங்க் ஆஃப் இங்கிலாந்து அதன் அடிப்படை வட்டி விகிதத்தை 0.5 சதவீத புள்ளிகளால் உயர்த்தியுள்ளது. இது கடந்த 27 ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட அதிகப்படியான வட்டி உயர்வாகும். இதன் மூலம் அந்நாட்டின் அடிப்படை வட்டி விகிதத்தை 1.75 சதவீதமாக உயர்ந்துள்ளது மேலும் இந்த வட்டி விகித அளவு 2008க்குப் பின் இருக்கும் அதிகப்படியான அளவாகும்.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்தச் சமீபத்திய வட்டி விகித உயர்வு மக்களின் நிதிநிலையைப் பாதிக்கும். ஆனால் இங்கிலாந்தில் மோசமாக இருக்கும் விலைவாசி உயர்வையும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி-க்கு இதைவிட வேறு வழி இல்லை என்பதையும் காட்டுகிறது.

13 சதவீத பணவீக்கம்

13 சதவீத பணவீக்கம்

இங்கிலாந்து பணவீக்கத்தை ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவில் நிலை நிறுத்த முயற்சி செய்யும் பாங்க் ஆஃப் இங்கிலாந்து, தற்போது அந்நாட்டின் பணவீக்கம் 9.4 சதவீதமாக உள்ளது பெரும் சவாலாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் அக்டோபர் மாதத்திற்குள் 13 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

இந்த உயர் பணவீக்கத்திற்கான முக்கியக் காரணங்களில் உலகளவில் அதிகரித்துள்ள எரிபொருள் விலை, தானியங்கள் மற்றும் பிற முக்கியப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட உயர்வு ஆகியவை உள்ளது. ரஷ்யப் போருக்கு பின்பு இந்த நிலை மேலும் மோசமாகியுள்ளது.

300 பவுண்ட்

300 பவுண்ட்

மேலும் பிரிட்டன் நாட்டின் ஒரு நடுத்தரக் குடும்பம் அக்டோபர் மாதத்திற்குள் தங்கள் எரிபொருளுக்கு மட்டும் மாதத்திற்கு 300 பவுண்ட் வரையில் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சீனா தைவான் மீது போரிட்டால் இது மேலும் மோசமாகிவிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UK may enter its longest recession; Bank of England warns Govt

UK may enter its longest recession; Bank of England warns Govt ரெசிஷனில் தள்ளப்படும் பிரிட்டன்.. 27 வருடத்திற்குப் பின்பு எடுத்த முடிவு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.