India at CWG, Day 9 Live: மல்யுத்தத்தில் ஆறாவது தங்கப்பதக்கம்!

மல்யுத்தத்தில் 11வது பதக்கம்!

Wrestling – Women’s 76 kg: வெண்கலப் பதக்கதுக்கான போட்டியில் 11-0 என்ற புள்ளி கணக்கில் பூஜா சிஹாக் வெற்றி!

Badminton Women’s Doubles : காயத்ரி – த்ரீசா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்று அபாரம்!

Para Table Tennis Men’s singles classes 3-5 : ராஜ் அலகார் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோல்வி!

மல்யுத்தத்தில் ஆறாவது தங்கப்பதக்கம்!

Wrestling – Men’s 74 kg : இறுதிப்போட்டியை 9-0 என்ற புள்ளி கணக்கில் வென்று தங்கப்பதக்கம் வென்றார் நவீன்!

ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் 2 இந்திய வீரர்கள்!

Badminton Men’s Singles: லக்ஷயா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிதிக்கு தகுதி!

கடைசி மூன்று காமன்வெல்த்தில் தொடர்ந்து மூன்று தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளார் வினேஷ் போகத்!

2014 –

2018 –

2022 –

இந்த சாதனையை காமன்வெல்த் வரலாற்றில் செய்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்!

மல்யுத்தத்தில் ஐந்தாவது தங்கப்பதக்கம்!

Wrestling Women’s 53 kg: இந்த பிரிவில் மொத்தம் நான்கு வீராங்கனைகள்தான் என்பதால் ரவுண்டு ராபின் முறை பின்பற்றப்பட்டது. அதில் பங்கேற்ற மூணு போட்டிகளிலும் வென்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் வினேஷ் போகத்!

மல்யுத்தத்தில் நான்காவது தங்கப்பதக்கம்!

Wrestling Men’s 57 kg – ரவி குமார் இறுதிப்போட்டியில் 10-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்!

மல்யுத்தத்தில் இன்று முதல் பதக்கம்!

Wrestling Women’s 50 kg – பூஜா கேலோத் வெண்கலப் பதக்கம் வென்றார்!

டேபிள் டென்னிஸில் பெண்கள் இரட்டையர் பிரிவின் பயணம் முடிவுக்கு வந்தது!

Table Tennis, women’s doubles: மணிக்கா – தீயா ஜோடியும் ஸ்ரீஜா – ரீத் ஜோடியும் காலிறுதியில் தோல்வி.

குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றார் ஜெய்ஸ்மின்!

Boxing, women’s 60kg : அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றார் ஜெய்ஸ்மின்!

Squash – mixed doubles: சவுரவ் கோஷல் – தீபிகா பலிக்கல் ஜோடி அரையிறுதியில் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடுவார்கள்!

Boxing, Women’s 50kg: நிக்கத் சரீன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!

டேபில் டென்னிஸில் மற்றொரு பதக்கம் உறுதி!

Table tennis Mixed Doubles: ஷரத் கமல் – ஸ்ரீஜா அக்குலா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி!

லான் பவுல்ஸில் இரண்டாவது பதக்கம்!

Lawn bowls – Men’s fours: இறுதிப்போட்டியில் 5-18 என்ற புள்ளி கணக்கில் வட அயர்லாந்திடம் இந்தியா தோல்வி. இதனால் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது!

பதக்கத்தை உறுதி செய்தது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி!

இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. இதன்மூலம் இந்தியாவிற்கு பதக்கம் உறுதியாகியுள்ளது!

இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதி!

Table tennis Men’s Doubles: தமிழக ஜோடியான சத்யன் – ஷரத் அரையிறுதியில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி!

Table Tennis Women’s singles: ஸ்ரீஜா அக்குலா அரையிறுதியில் 3-4 என்ற செட் கணக்கில் தோல்வி!

அரையிறுதியில் பி.வி சிந்து!

Badminton – Women’s singles: காலிறுதியில் மலேசியாவின் ஜின் வெய் கோவை எதிர்கொண்ட பி.வி.சிந்து 19-21, 21-14, 21-18 என்ற கணக்கில் வெற்றி! முதல் செட்டில் தோத்தாலும் அடுத்த இரண்டு செட்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றார் சிந்து!

Wrestling – Women’s 50 kg: அரையிறுதியில் பூஜா கேலோத் 6-9 என்ற புள்ளி கணக்கில் தோல்வி!

மல்யுத்தத்தில் எட்டாவது பதக்கம் உறுதி!

Wrestling – Men’s 57 kg: ரவி குமார் 14-4 என்ற கணக்கில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் ரவிக்கு பதக்கம் உறுதியானது

Women’s Cricket: இந்தியா vs இங்கிலாந்து (அரையிறுதி)

முதலில் பேட் செய்த இந்தியா அணி 164 ரன்கள் குவிப்பு. அதிகபட்சமாக ஸ்ம்ரிதி 61 ரன்களையும் ஜெமிமாஹ் 44 ரன்களும் எடுத்தனர்!

Wrestling – Men’s 97 kg: தீபக் நெஹ்ரா காலிறுதியில் தோல்வி!

மல்யுத்தத்தில் மற்றொரு பதக்கம் உறுதி!

Wrestling – Men’s 74 kg: நவீன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார்!

Wrestling – Women’s 76 kg: பூஜா சிஹாக் அரையிறுதியில் தோல்வி!

Wrestling – Men’s 57 kg: ரவி குமார் 74 நொடிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

வெள்ளிப் பதக்கத்துடன் பிரியங்கா கோஸ்வாமி!

Women’s 4 x 100m relay: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது!

கடைசி ஆறு காமன்வெல்த் தொடர்களிலும் 3000m steeplechase-ல் தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்து பதக்கங்களையும் கென்யாவை சேர்ந்த வீரர்கள் வாங்கி வந்தனர்! இப்போது அதுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இந்தியாவின் அவினாஷ் சாப்லே!

தடகளத்தில் இந்தியாவிற்கு நான்காவது பதக்கம்!

Men’s 3000m Steeplechase: வெள்ளிப் பதக்கம் வென்றார் அவினாஷ் முகுந்த் சாப்லே!

0.05 நொடிகளில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார் அவினாஷ்!

காமன்வெலத் வரலாற்றில் 3000m steeplechase போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கம் இது!

Table Tennis Men’s singles – சத்யன் ஞானசேகரன் காலிறுதியில் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Table Tennis Men’s singles – சனில் ஷெட்டி காலிறுதியில் 1-4 என்ற கணக்கில் தோல்வி!

Women’s Women’s 76 kg: பூஜா சிஹக் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling Men’s 74 kg – நவீன் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Women’s Freestyle 76 kg: பூஜா சிஹக் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling, women’s 53kg: இரண்டாவது போட்டியிலும் வினேஷ் போகத் வெற்றி! இன்னும் ஒரு போட்டியில் வென்றால் தங்கப்பதக்கம் கிடைக்கும்!

காமன்வெல்த் வரலாற்றில் Race walk-ல் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் பிரியங்கா!

இந்தியாவுக்கு 27வது பதக்கம்!

வரலாறு படைத்தார் பிரியங்கா!

Women’s 10 km Race walk: 43:38.82 நிமிடத்தில் 10கிமீ தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் பிரியங்கா!

Men’s Boxing – 48kg-51kg: அமித் பங்கல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்!

Athletics – women’s 10 km race walk: 7 கிலோமீட்டர் முடிவில் இந்தியாவின் பிரியங்கா மூன்றாவது இடம்.

Wrestling, Men’s 74kg: நவீன் சிஹக் 13-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

Wrestling, women’s 50kg: பூஜா கேலோத் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

Boxing, Women’s 48kg: நீத்து கன்காஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்!

Wrestling, women’s 53kg: முதல் போட்டியில் வினேஷ் போகட் 36 நொடிகளில் வெற்றி!

Table tennis Men’s singles: தமிழக வீரர் ஷரத் கமல் காலிறுதியில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்!

Table tennis Women’s doubles: ஸ்ரீஜா-ரீத் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

Table tennis Women’s doubles: மணிக்கா – தீயா ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.