இணைப்பை துண்டித்த அண்ணா பல்கலைக்கழகம்; 18 என்ஜினீயரிங் கல்லூரிகளின் நிலை என்ன?

Chennai Tamil News: பொறியியல் கல்லூரிகளில் முக்கியமாக தேவைப்படும் ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற உள்கட்டமைப்புகள் போதிய அளவு இல்லாத காரணத்தினால் 18 பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டிற்கான (2022-23) அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பை இழக்கவுள்ளது.

மேலும், உள்கட்டமைப்பில் குறைபாடு உள்ள 207 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர், அண்ணா பல்கலைக்கழகம் சமர்ப்பித்த இணக்க அறிக்கைகளின் அடிப்படையில் இணக்க பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை முடிவு செய்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு பின்பு, அண்ணா பல்கலைக்கழகம் 476 பொறியியல் கல்லூரிகள், கட்டிடக்கலை கல்லூரிகள், எம்பிஏ மற்றும் எம்சிஏ திட்டங்களை வழங்குபவர்களின் தகுதித்தேர்வு நடத்தியது. ஆய்வில் வெளிவந்தது என்னவென்றால், உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் உறுப்பினர்கள் உள்ள கல்லூரிகள் 50%க்கும் அதிகமான உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் 225 பொறியியல் மற்றும் தனிக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியது.

புதிய ஆசிரியர்களை நியமிக்கவும், ஆய்வகங்கள், வகுப்பறைகளை மேம்படுத்தவும், இணக்க அறிக்கையை சமர்ப்பிக்கவும் கல்லூரிகளுக்கு நான்கு வார கால அவகாசம் அளிக்கப்பட்டது.  இதில் 18 பொறியியல் கல்லூரிகள் தாக்கல் செய்த அறிக்கைகள் திருப்திகரமாக இல்லாததால், புதிதாக ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார்.

நோட்டீஸ் அளிக்கப்பட்ட கல்லூரிகள் அவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்த இன்னும் பத்து நாட்கள் அவகாசம் இருக்கிறது. பல்கலைக்கழக நிபுணர்கள் தங்கள் இணக்க அறிக்கைகளின் அடிப்படையில் மற்ற கல்லூரிகளுக்கு அனுமதி நீட்டிப்பு வழங்க முடிவு செய்துள்ளனர்.

இந்த 18 கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட நான்கு வார கால அவகாசத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவை இணைப்பு பெற வாய்ப்பில்லை என்று சில பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட கல்லூரி சரியான நேரத்தில் இணக்க அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றால், ஒரு படிப்பை அல்லது கல்லூரியில் இணைப்பை நீக்கவோ அல்லது இடங்களைக் குறைக்கவோ பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.