காமன்வெல்த் பாட்மின்டன்: தங்கம் வென்றார் பி.வி.சிந்து| Dinamalar

பர்மிங்காம்: காமன்வெல்த்தில் பாட்மின்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இன்றுடன் (ஆக.,8) முடிவடைய உள்ள இந்த விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் பதக்கத்துடன் 5வது இடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், பாட்மின்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பி.வி.சிந்து பதக்கத்தை உறுதி செய்தார்.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கனடாவின் மிச்செல் லி.,யை எதிர்கொண்டார். இதில் துவக்கம் முதல் அசத்தி வந்த பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றிப்பெற்று காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். இதனால் இந்தியா வென்ற தங்கப்பதக்கத்தின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது. மிச்செல் லி கடந்த 2014ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார். பி.வி.சிந்து கடந்த 2018 காமன்வெல்த்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.