பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து… `சக்திமான்’ முகேஷ் கன்னாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

90’s கிட்ஸ்களின் பேவரைட் தொடர்களில் ஒன்று சக்திமான். அப்போது முதல் இப்போது வரை சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணாவின் நடிப்பின் தாக்கம் எல்லா 90’s கிட்ஸ்களிடமும் இன்னும் இருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. இப்படி மக்களிடம் பிரபலமான சக்திமான் புகழ் நடிகர் முகேஷ் கண்ணா பீஸ்ம் ​​இன்டர்நேஷனல் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் அவ்வப்போது சில கருத்துகளைப் பேசி வீடியோவாக பதிவிடுவது வழக்கம்.

சக்திமான்

அப்படி சமீபத்தில் பேசி வெளியிட்ட வீடியோ சர்ச்சையாகியுள்ளது. அந்த வீடியோவில், “உடலுறவை விரும்பிக் ஆண்களிடம் கேட்கும் பெண்கள் பெண்களே அல்ல. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள். இணையத்தில் பெண்களால் ஆண்கள் கவர்ந்திழுக்கப்படுவதால் ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்கள் மோசடிகளை நடத்த முயற்சி செய்கிறார்கள். அப்பாவி ஆண்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். அவர்களின் நிர்வாணப் படங்களை அனுப்பி உங்களின் நிர்வாணப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்தி, பணத்திற்காக உங்களை மிரட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற சமூக ஊடக தளங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

முகேஷ் கண்ணா

பெண்கள் வரம்புகளுக்குள் இருக்கவும், மரபுகளை மதிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்” என சர்ச்சைக்குரிய விதமாக கருத்து தெரிவ்சித்திருந்தார்.

இந்த வீடியோ வெளியானதிலிருந்து முகேஷ் கண்ணாவின் கருத்துகளுக்காக அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.