விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்… இந்தியன் ரயில்வே அறிவிப்பு

தீபாவளி, பொங்கல் உள்பட ஒவ்வொரு சிறப்பு பண்டிகையின் போதும் இந்தியன் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

திருவிழா நேரங்களில் அதிக அளவில் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஒரு சில சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.

டாடா-வின் மாஸ்டர் பிளான்.. குஜராத் கார் தொழிற்சாலை-யில் என்ன செய்யபோகிறது தெரியுமா..?

பெலகாவி-யஸ்வந்த்பூர்

பெலகாவி-யஸ்வந்த்பூர்

பெலகாவி-யஸ்வந்த்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் பெலகாவியில் இருந்து ஆகஸ்ட் 21ம் தேதி இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு ஆகஸ்ட் 22ம் தேதி காலை 8.20 மணிக்கு யஸ்வந்த்பூரை சென்றடையும்.

மும்பை சென்ட்ரல் - தோக்கூர்

மும்பை சென்ட்ரல் – தோக்கூர்

மும்பை சென்ட்ரல் – தோக்கூர் சிறப்பு ரயில் (09001) ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6 வரை ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் மும்பை சென்ட்ரலில் இருந்து மதியம் 12 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு தோகூரை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக தோக்கூர்-மும்பை சென்ட்ரல் சிறப்பு ரயில் (09002) ஆகஸ்ட் 24 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் தோக்கூரில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.05 மணிக்கு மும்பை சென்ட்ரலை சென்றடையும்.

மும்பை சென்ட்ரல்-மட்கான்
 

மும்பை சென்ட்ரல்-மட்கான்

மும்பை சென்ட்ரல்-மட்கான் சிறப்பு ரயில் (09003) மும்பை சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 11 வரை ஒவ்வொரு திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளிலும் மதியம் 12:00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04:30 மணிக்கு மட்கானை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக மட்கான்-மும்பை சென்ட்ரல் சிறப்பு ரயில் (09004) ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 12 வரை ஒவ்வொரு செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு மட்கானில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1 மணிக்கு மும்பை சென்ட்ரலை வந்தடையும்.

பாந்த்ரா டெர்மினஸ்-கூடல்

பாந்த்ரா டெர்மினஸ்-கூடல்

பாந்த்ரா டெர்மினஸ்-கூடல் சிறப்பு ரயில் (09011) ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் மதியம் 2.40 மணிக்கு பாந்த்ரா டெர்மினஸில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.40 மணிக்கு கூடலை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக கூடல்-பாந்த்ரா டெர்மினஸ் சிறப்பு ரயில் (09012) ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 9 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 6.45 மணிக்கு கூடலில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 9.30 மணிக்கு பாந்த்ரா டெர்மினஸை சென்றடையும்.

உத்னா-மட்கான்

உத்னா-மட்கான்

உத்னா-மட்கான் வாராந்திர சிறப்பு ரயில் (09018) ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 9 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் 3.25 மணிக்கு உத்னாவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு மட்கானை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக மட்கான்-உத்னா சிறப்பு ரயில் (09017) ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10.05 மணிக்கு மட்கானில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு உத்னாவை சென்றடையும்.

அகமதாபாத்-கூடல்

அகமதாபாத்-கூடல்

அகமதாபாத்-கூடல் சிறப்பு ரயில் (09412) ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 6 வரை ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் காலை 9.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.40 மணிக்கு கூடலை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக கூடல்-அகமதாபாத் சிறப்பு ரயில் (09411) ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 7 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் கூடலில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு அகமதாபாத் சென்றடையும்.

விஸ்வாமித்ரி-கூடல்

விஸ்வாமித்ரி-கூடல்

விஸ்வாமித்ரி-கூடல் வாராந்திர கணபதி திருவிழா சிறப்பு ரயில்கள் (09150) ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 5 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் விஸ்வாமித்திரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 05.40 மணிக்கு கூடலை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக கூடல்-விஸ்வாமித்ரி சிறப்பு ரயில் (09149) ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 6 வரை ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் கூடலில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 1 மணிக்கு விஸ்வாமித்ரியை சென்றடையும்.

மும்பை-மங்களூரு

மும்பை-மங்களூரு

மும்பை-மங்களூரு சந்திப்பு (01165) சிறப்பு ரயில் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 6 வரை ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அதிகாலை 12.45 மணிக்கு LTTயில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 7.30 மணிக்கு மங்களூரு சந்திப்பை வந்தடையும். அதேபோல் மறுமார்க்கமாக மங்களூரு சந்திப்பு-மும்பை சிறப்பு ரயில் (01166) ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 6 வரை ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் மங்களூரு சந்திப்பில் இருந்து இரவு 10:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 6:30 மணிக்கு எல்டிடி சென்றடையும்.

எல்டிடி-தோக்கூர்

எல்டிடி-தோக்கூர்

எல்டிடி-தோக்கூர் சிறப்பு ரயில் (01153) ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 11 வரை தினமும் இரவு 10.15 மணிக்கு எல்டிடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தோகூரை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக தோக்கூர்-எல்டிடி (01154) சிறப்பு ரயில் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 12 வரை தினமும் காலை 7.30 மணிக்கு தோக்கூரில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 1.25 மணிக்கு எல்டிடியை வந்தடையும்.

மும்பை-சவந்த்வாடி

மும்பை-சவந்த்வாடி

மும்பை-சவந்த்வாடி டெய்லி ஸ்பெஷல் (01137) ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 11 வரை தினமும் அதிகாலை 12.20 மணிக்கு சிஎஸ்எம்டி மும்பையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சாவந்த்வாடி சாலையை வந்தடையும். அதேபோல் மறுமார்க்கமாக சவந்த்வாடி-மும்பை (01138) சிறப்பு ரயில் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 11 வரை தினமும் மதியம் 02.40 மணிக்கு சவந்த்வாடி சாலையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு CSMT மும்பையை வந்தடையும்.

புனே-கூடல்

புனே-கூடல்

புனே-கூடல் சிறப்பு ரயில் (01141) புனேவில் இருந்து ஆகஸ்ட் 23, ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12:30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் மதியம் 2 மணிக்கு கூடலை வந்தடையும். அதேபோல் மறுமார்க்கமாக கூடல்-புனே சிறப்பு ரயில் (01142) ஆகஸ்ட் 23, ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் கூடலில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு புனே சென்றடையும்.

புனே-திவிம்

புனே-திவிம்

புனே-திவிம் சிறப்பு ரயில் (01145) ஆகஸ்ட் 26, செப்டம்பர் 2 மற்றும் செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் மாலை 5.30 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 11.40 மணிக்கு திவிம் சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக கூடல்-திவிம் சிறப்பு ரயில் (01146) ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் செப்டம்பர் 11 ஆகிய தேதிகளில் கூடலில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு புனே சென்றடையும்.

நாக்பூர்-மட்கான்

நாக்பூர்-மட்கான்

நாக்பூர்-மட்கான் சிறப்பு ரயில் (01139) ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 10 வரை ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் மாலை 3:05 மணிக்கு நாக்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 5:30 மணிக்கு மட்கானை வந்தடையும். அதேபோல் மறுமார்க்கமாக மட்கான்-நாக்பூர் சிறப்பு ரயில் (01140) ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 11 வரை ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 7 மணிக்கு மட்கானில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 9.30 மணிக்கு நாக்பூரை வந்தடையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian Railways To Operate Special Trains For Ganesh Chaturthi, List Here!

Indian Railways To Operate Special Trains For Ganesh Chaturthi, List Here! | விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்… இந்தியன் ரயில்வே அறிவிப்பு

Story first published: Saturday, August 13, 2022, 15:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.