பிஎஸ்என்எல்-ன் புதிய பிளான்! ஜியோவை விட பாதிக்கும் குறைவான விலையில்

நாட்டின் 75வது சுந்ததிர தினத்தையொட்டி டெலிகாம் நிறுவனங்கள் பல புதிய திட்டங்கள் மற்றும் அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஜியோ ஏற்கனவே பல புதிய ஆஃபர் மற்றும் திட்டங்களை அறிவித்திருக்கும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் போட்டிக்கு களத்தில் குதித்துள்ளது. இந்த ஆஃபரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இது சரியான சந்தர்பம். குறைந்த விலையில் அதிவேக இணையத்தை கொடுக்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம். 

இதற்காக 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, BSNL ஒரு சிறப்பு சலுகை திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் இரண்டு பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரூ.449 மற்றும் ரூ.599 திட்டங்கள் அடங்கும். 75 நாட்கள் வேலிடிட்டியுடன் வெறும் ரூ.275-க்கு இந்த திட்டங்களை வாடிக்கையாளர்கள் செயல்படுத்த முடியும் என்பது சிறப்பு. 999 பிராட்பேண்ட் திட்டமும் இந்த சலுகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படியான ஆஃபரை பிஎஸ்என்எல் தவிர வேறு எந்த நிறுவனமும் குறைவான விலைக்கு வழங்கவில்லை.

BSNL சலுகையின் விவரம் 

BSNL-ன் இந்த சலுகையை வெறும் 275 ரூபாய்க்கு செயல்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த சலுகையின் கீழ், திட்டத்தின் விலை கண்டிப்பாக குறையும் ஆனால் பலன்கள் அப்படியே இருக்கும். அதன் வேலிடிட்டி 75 நாட்களுக்கு இருக்கும். திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்தவுடன், அந்தத் திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட உண்மையான விலையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள் 

BSNL-ன் 999 திட்டத்தில், பயனர்கள் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதற்கு, 775 ரூபாய் செலுத்த வேண்டும், வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் 150Mbps வேகத்தில் 2TB டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன் பல OTT ஆப்ஸின் இலவச சந்தாவையும் பெறலாம். BSNL-ன் ரூ.449 திட்டத்தில், பயனர்கள் 30Mbps வேகத்தில் 3.3TB டேட்டாவைப் பெறுகிறார்கள். BSNL இன் ரூ.599 திட்டத்தில், 3.3TB டேட்டா 60Mbps வேகத்தில் கிடைக்கிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.