கௌதம் அதானி-க்கு Z பிரிவு VIP பாதுகாப்பு.. மத்திய அரசு ஒப்புதல்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானிக்கு CRPF கமாண்டோக்களின் Z பிரிவு VIP பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான அறிவிப்பு மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய அளவில் கௌதம் அதானிக்கு இந்த Z பிரிவு VIP பாதுகாப்பைக் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகிறது.

Z பிரிவு VIP பாதுகாப்பு சேவைக்குக் கௌதம் அதானி ஒரு மாதத்திற்குச் சுமார் ரூ.15-20 லட்சம் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கௌதம் அதானி

மத்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் தயாரித்த அச்சுறுத்தல் அறிக்கையின் அடிப்படையில், 60 வயதான இந்தியாவின் பெரும் பணக்காரர் மற்றும் உலகின் 4வது பெரும் பணக்காரர் ஆக விளங்கும் கௌதம் அதானிக்கு மத்திய அரசு பட்டியலின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

சிஆர்பிஎஃப் விஐபி பாதுகாப்பு

சிஆர்பிஎஃப் விஐபி பாதுகாப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) விஐபி பாதுகாப்புப் பிரிவை இந்தப் பணியை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவில் பல தொழிலதிபர்களுக்கு இதுபோன்ற உயர்மட்ட பாதுகாப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் Z பிரிவு பாதுகாப்பு என்பது 3வது தர பாதுகாப்பாகும்.

முகேஷ் அம்பானி
 

முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி-க்கு 2013 ஆம் ஆண்டு CRPF கமாண்டோக்களின் Z வகைப் பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி-க்கு Z வகை அல்லாமல் குறைந்த பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

33 பாதுகாப்பு அதிகாரிகள்

33 பாதுகாப்பு அதிகாரிகள்

இந்த Z பிரிவு பாதுகாப்பில் 3 முதல் 4 CRPF கமாண்டோக்கள் மற்றும் சுமார் 30 காவல் துறை அதிகாரிகள் என 33 முதல் 35 பாதுகாப்பு அதிகாரிகள் எப்போது கௌதம் அதானி-யை சுற்றியே இருப்பார்கள். பொதுவாக இந்தப் பாதுகாப்பு மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம், அரசுக்கு முக்கியமானவர்கள், அச்சுறுத்தல் எதிர்கொள்ளும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும்.

மாபெரும் வளர்ச்சி

மாபெரும் வளர்ச்சி

கௌதம் அதானி சொத்து மதிப்பு 2020 முடிவில் வெறும் 8.9 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2 வருடத்தில் அதிகப்படியான நிறுவன கைப்பற்றல் மற்றும் வர்த்தக விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் அதானியின் சொத்து மதிப்பு இன்றைய வர்த்தக முடிவில் சுமார் 134 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian Govt grants Z category VIP security cover to Gautam Adani

Indian Govt grants Z category VIP security cover to Gautam Adani கௌதம் அதானிக்கு Z பிரிவு VIP பாதுகாப்பு.. மத்திய அரசு ஒப்புதல்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.