RPL-2022 வெற்றிக்கிண்ணம் யங் சோல்ஜர்ஸ் வசமானது

பிறைந்துரைச்சேனை றோயல் விளையாட்டுக் கழகத்தின் 14வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட “றோயல் பிறீமியர் லீக் – 2022” – RPL – 2022 கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் இடம்பெற்றது.

இச்சுற்றுத்தொடரில் கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 32 அணிகள் பங்குபற்றியிருந்தன.

சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் ஓட்டமாவடி யங் சோல்ஜர்ஸ் (YoungSoldiers SportsClub-Yssc) விளையாட்டுக்கழக அணியும் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழக அணியும் (ValarPirai-VP) மோதின.

ஓட்டமாவடி அமீர் அலி வைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற யங் சோல்ஜர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 152/4 ஓட்டங்களைப்பெற்றது.153 ஓட்ட இலக்குடன் களமிறங்கிய வளர்பிறை அணி 125/9 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதன்படி இறுதிப்போட்டியில் வென்ற யங் சோல்ஜர்ஸ் அணி றோயல் பிரீமியர் லீக் RPL-2022 வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.தொடரின் மூன்றாவது வெற்றி அணியினைத் தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற லெஜெண்ட்ஸ் மற்றும் இளந்தளிர் அணிகளுக்கிடையிலான போட்டியில் லெஜெண்ட்ஸ் 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பிறைந்துரைச்சேனை றோயல் விளையாட்டுக்கழகத் தலைவர் எம்.ஆப்தீன் தலைமையில் இடம்பெற்ற இவ்விறுதிப்போட்டி நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் எம்.எம்.நௌபீஸ் கலந்து சிறப்பித்திருந்தார்.

மேலும் விஷேட அதிதிகளாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.லசந்த பண்டார, சட்டத்தரணி ஹபீப் றிபான், அறபா நகர் முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலய அதிப்ர் மெளலவி ஏ.யூ.எம்.நளீம் ஸலாமி, எம்.எஸ்.எம்.அமீர்,  ஏ.எஸ்.அறபாத்,  எம்.இம்றான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Media Unit, – Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.