சென்னை வங்கிக் கொள்ளை | அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது.

இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 31.7 கிலோ தங்க நகைகள், கடந்த 13-ம் தேதி கொள்ளை போனது. பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி கட்டிப் போட்டுவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வங்கியில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகளை மூன்றே நாட்களில் போலீஸார் மீட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் காவல் துறையியனர் சோதனை நடத்தினார்.

இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமல்ராஜ் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவருக்கு உறவினர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.