14 ஆண்டுகளுக்கு பின் விலை உயரும் நூடுல்ஸ்… இந்த ஒரே ஒரு காரணம் தான்!

தாய்லாந்து நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக நூடுல்ஸ் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது நூடுல்ஸ் விலையை உயர்த்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என தாய்லாந்து அரசிடம் நூடுல்ஸ் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டை பொருத்தவரை நூடுல்ஸ் என்பது பெரும்பாலான மக்கள் சாப்பிடும் உணவு என்பதால் அந்த உணவின் விலை ஏற்றத்தை அரசாங்கத்தின் அனுமதி கொண்டே ஏற்ற வேண்டும்.

எனவே 14 ஆண்டுகளாக நூடுல்ஸ் விலை உயராமல் இருக்கும் நிலையில் தற்போது தயாரிப்புக்கு அதிக செலவு ஆவதால் நூடுல்ஸ் விலையை ஏற்றிக்கொள்ள நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் இந்த கோரிக்கையை உடனடியாக தாய்லாந்து அரசால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமே என கூறப்படுகிறது.

இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..!

நூடுல்ஸ் விலை

நூடுல்ஸ் விலை

நூடுல்ஸ் தயாரிப்பாளர்களின் அறிக்கைப்படி தாங்கள் நூடுல்ஸை உற்பத்தி செய்ய 6 பாட் முதல் 7 பாட் வரை செலவாகிறது என்றும் ஆனால் விற்பனை விலை மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூடுல்ஸ் தயாரிப்பாளர்களின் இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த போதிலும் உடனடியாக நூடுல்ஸ் விலையை உயர்த்த அரசு மறுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசின் அனுமதி

அரசின் அனுமதி

நூடுல்ஸ் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கம் இருந்தாலும் தாய்லாந்து மக்கள் நூடுல்ஸ் உணவை அதிகம் பயன்படுத்துவதால் அவர்கள் மீது அதிக சுமை சுமத்துவதை அனுமதிக்க முடியாது என்று தாய்லாந்து அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் சிறிய அளவில் விலையை உயர்த்த விரைவில் அரசு அனுமதிக்கும் என்று ஒருசிலர் கூறி வருகின்றனர்.

 விலை உயர்வு
 

விலை உயர்வு

தாய்லாந்து நாட்டில் மொத்தம் ஐந்து முக்கிய நூடுல்ஸ் உற்பத்தியாளர்கள் விலை உயர்வு கோரிக்கையை விடுத்த நிலையில் விலையை உயர்த்துவதற்கு தாய்லாந்து அரசு அனுமதி ஆலோசனை செய்து கூறப்படுகிறது. எனவே 14 ஆண்டுகளுக்கு பின் சிறிய அளவில் விரைவில் நூடுல்க்ஸ் விலை தாய்லாந்தில் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

உக்ரைன் மீதான போர்

உக்ரைன் மீதான போர்

நூடுல்ஸை உயர்வுக்கு முக்கிய காரணம் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் வரும் போர் என்று கூறப்படுகிறது. இந்தப் போர் காரணமாக நூடுல்ஸ் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் போக்குவரத்து கட்டணமும் இரு மடங்கு உயர்ந்து உள்ளதாகவும் நூடுல்ஸ் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஆசியா முழுவதும் விலை உயர்வு

ஆசியா முழுவதும் விலை உயர்வு

ஏற்கனவே ஆசியா முழுவதும் நூடுல்ஸ் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தாய்லாந்தில் மட்டும் இன்னும் பழைய விலைக்கே விற்பனையாகி வருவதாக நூடுல்ஸ் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

இந்த நிலையில் நூடுல்ஸ் உற்பத்தியாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தாய்லாந்து அரசு நூடுல்ஸ் விலையை உயர்த்த அனுமதிக்காவிட்டால் அதிக விலைக்கு வாங்கும் ஏற்றுமதியாளர்களுக்கு தங்கள் மொத்த உற்பத்தியையும் ஏற்றுமதி செய்யப்போவதாகவும் நூடுல்ஸ் உற்பத்தியாளர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Instant Noodle Makers To Demand Thailand’s First Price Hike In 14 Years

Instant Noodle Makers To Demand Thailand’s First Price Hike In 14 Years | 14 ஆண்டுகளுக்கு பின் விலை உயரும் நூடுல்ஸ்… இந்த ஒரே ஒரு காரணம் தான்!

Story first published: Thursday, August 18, 2022, 10:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.