3.7 கிலோ நகைகளை காவல் ஆய்வாளரின் வீட்டில் பதுக்கியது ஏன்..? சகலையால் சங்கடத்தில் சிக்கினார்..!

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடித்த நகைகளில் 3கிலோ 700 கிராம் நகைகளை பதுக்கி வைத்ததாக அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், தனிப்படை போலீசாரிடம் சிக்கி உள்ளார். சகலைப்பாடியின் தகாத சகவாசத்தால் போலீஸ் வேலைக்கு வேட்டு வைக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…

சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அங்கு வேலைபார்த்த முருகன்அவனது பள்ளிக்கூட கூட்டாளிகள் பாலாஜி, சந்தோஷ், சூர்யா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதலில் வங்கியில் கொள்ளை போனது 20 கோடி ரூபாய் நகைகள் எனவும், பின்னர் கொள்ளையர்கள் பிடிபட்டதும் 32 கிலோ என்றும் காவல்துறையால் சொல்லப்பட்ட நிலையில் வங்கி நிர்வாகத்தரப்பில் மேலும் 3 கிலோ 700 கிராம் நகைகளை காணவில்லை என்று சொல்லப்பட்டதால் இந்த கொள்ளை வழக்கில் முதலில் சிக்கிய சந்தோஷ் என்பவரை காவலில் எடுத்து விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

வங்கியில் கொள்ளையடித்த நகைகளை அதே பையுடன் பறிமுதல் செய்ததாக காவல்துறையினர் அறிவித்த நிலையில் 3 கிலோவுக்கு அதிகமான நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய கைது செய்யப்பட்ட கொள்ளையன் சந்தோஷ் தப்பிச்சென்ற நேரத்தில் செல்போனில் யார் யாருடன் பேசினான் என்பதை வைத்து போலீசார் சந்தோஷிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தனிப்படை போலீசாரிடம் தான் உண்மையை சொன்னா அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால், சொல்கிறேன் எனக்கூற போலீசாரும் நடவடிக்கை எடுக்க மாட்டோன் என்று கூறியதை அடுத்து சந்தோஷ் தனது மனைவியின் சகோதரியான இந்திராவிடம் பேசி அவரது கணவரும் சகலைப்பாடியுமான அச்சிருப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜின் வீட்டில் நகைகளை மறைத்து வைத்திருப்பதாக கூறினார்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் அமல்ராஜ், அவரது மனைவி இந்திரா ஆகியோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த தனிப்படை போலீசார் அவர்களது வீட்டில் பது க்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ 700 கிராம் எடையுள்ள வங்கியில் கொள்ளை போன நகைகளை பறிமுதல் செய்தனர்.

காவல் ஆய்வாளரையும் அவரது மனைவி இந்திராவையும் விசாரித்த போலீசார், அமல்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் பரிந்துறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கைதாகி ஜெயிலுக்கு சென்று வந்த பின்னர் அந்த நகைகளை எல்லாம் பிரித்துக் கொண்டு சந்தோசமாக வாழலாம் என்று எண்ணி இருந்த கொள்ளையன் சந்தோஷின் கனவில், இடிவிழுந்துள்ளது குறிப்பிடதக்கது..!

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.