இலங்கையில் பணவீக்கம் குறையும் சாத்தியம் – மத்திய வங்கி ஆளுநர் தகவல்


இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடந்த காலங்களில் மேற்கொண்ட தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான முடிவுகள் காணப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

அந்த நிலையில் எதிர்காலத்தில் பணவீக்கம் குறையும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

அந்நிய செலாவணி பற்றாக்குறை ஓரளவு குறைந்துள்ளதுடன் வங்கி முறைமையில் அந்நிய செலாவணி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பணவீக்கம் குறையும் சாத்தியம் - மத்திய வங்கி ஆளுநர் தகவல் | Inflation Is Likely To Decrease In Sri Lanka

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மத்திய வங்கி நாணயச் சபை, தற்போதைய வட்டி வீதங்களை அதே மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி நிலையான வைப்புகளுக்கு 14.5 சதவீதமும், நிலையான கடன்களுக்கு 15.5 சதவீதமும் வட்டி விகிதங்களை பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய உள்ளுர், பூகோள மற்றும் எதிர்பார்க்கப்படும் மேக்ரோ பொருளாதாரப் போக்குகளை கவனமாகக் கருத்திற்கொண்டு மத்திய வங்கியின் நாணயச் சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.