சிகரெட்டுக்கு பணம் பணம் வேணுமா? கடைக்காரர் காதை கடித்த காவலர்….!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கதவு இல்லாததால் இரவு நேரத்தில் தார்பாலினால் கதவை மூடி வைத்துவிட்டு கடைக்குள்ளேயே உறங்குவது வழக்கம். இதேபோன்று கடையில் செந்தில்குமாரின் மகன் செல்வசிவா தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் தார்பாலினை திறந்து உள்ளே வந்த சிவகங்கை மாவட்டம் கீதக்காதியைச் சேர்ந்த போலீஸாக்காரரான முகமது ஆஷிக்  என்பவர் செல்வ சிவாவை எழுப்பி சிகரெட் வேண்டும் என கேட்டுள்ளார். செல்வசிவா நான்கு சிகரெட்களை கொடுத்து விட்டு 54 ரூபாய் பணம் கேட்டுள்ளார். 

அப்போது குடிபோதையில் இருந்த ஆஷிக் தன்னை காவலர் என அறிமுகப்படுத்திக் கொண்டு காலையில் வந்து பணம் தருவதாக கூறியுள்ளார். செல்வ சிவாவும் சரி என கூறிய நிலையில் சிறிது நேரத்தில் முகமது ஆசிக் பேடிஎம் மூலம் 50 செலுத்தினார். மீதம் நான்கு ரூபாயை செல்வ சிவா கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் paytm ஸ்கேனரை காண்பிக்குமாறு முகமது ஆசிக்கேட்க, செல்வசிவாவும் பேடிஎம் ஸ்கேனரை எடுத்து காட்டியுள்ளார். அப்போது திடீரென பேடிஎம் ஸ்கேனரை பறித்துக் கொண்ட காவலர், அதனை செல்வ சிவாவின் மீது தூக்கி எறிந்துள்ளார். 

இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே, மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட காவலர் கடையிலிருந்து வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது கடையில் இருந்து வெளியே வந்த காவலர் மீண்டும் செல்வ சிவாவின் காதை பிடித்து கடித்துள்ளார். இதனால் வலியால் துடித்த செல்வசிவா உடனடியாக தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் போதையில் இருந்த காவலரை அவரது நண்பர்கள் அழைத்துச்சென்றனர். தகவலின் பேரில் விரைந்து வந்த செந்தில்குமார் தனது மகனை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மருத்துவர்கள் செல்வ சிவாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் முகமது ஆசிக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.