மின்சாரம் வாங்க, விற்க மத்திய அரசு தடை: “நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது!"- செந்தில் பாலாஜி தகவல்

தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மின் பரிமாற்றங்களில் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மாநிலங்கள் சுமார் 5,100 கோடி ரூபாய் கட்டணத்தை மின் உற்பத்தியாளர்களுக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தரப்பிலிருந்து இத்தகைய தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது ட்விட்டரில் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி, “ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் ’PRAAPTI PORTAL’ இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை இல்லை.

நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை. சர்ச்சைக்குறிய பட்டியலுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பும், அவகாசமும் இல்லாமல் தன்னிச்சையாக மின் வழங்கலை நிறுத்துவது ஏற்புடையதல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.