நாகை வேளாங்கண்ணி மாதா திருவிழா: சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கம்…

சென்னை: பிரசித்தி பெற்ற நாகப்பட்டிணம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி, தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளையும், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்குவ தாக அறிவித்து உள்ளது.

நாளை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா வரும்  29-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கவிருக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில்  வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வருகைதருவார்கள். இந்த திருவிழாவின் கடைசி நாளான செப்டம்பர் 8 ஆம் தேதி மேரி மாதா பிறந்த நாள் கொண்டாடப்படும். அன்றைய தினம் கூட்டம் அலைமோதும். மேலும் பல யாத்ரிகர்கள்,  நடைபயணம் மூலம் வேளாங்கண்ணிக்கு செல்வதும் உண்டு.

இந்த நிலையில், திருவிழாவையொட்டி,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், சிறப்பு பஸ்கள் 2 நாட்கள் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது போக்குவரத்து தறை தெரிவித்து உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து  சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளதாகவும், வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி 25 பஸ்களும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி 25 சிறப்பு பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும் என்று மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும்,மக்களின் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க தயாராக இருப்பதாகவும்,  சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது என்றும்  தெரிவித்துள்ளார்.

அதுபோல, வேளாங்கண்ணி திருவிழாவுக்காக சிறப்பு ரயில்  இயக்கவிருப்பதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. 

திருவிழாவை முன்னிட்டு, தென்மேற்கு ரயில்வே வாஸ்கோடகாமா (கோவாவிலிருந்து)  மற்றும் வேளாங்கண்ணி (தமிழ்நாடு) வரை பயணிக்கும் மக்களுக்காக சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.

வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஆகஸ்ட் 27-ம் தேதி காலை 9 மணிக்கு வாஸ்கோடகாமாவில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12:25 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

பின்னர், வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா சிறப்பு ரயில் (07358) வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 11:45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடையும்.

மட்கான், சன்வோர்டெம் சர்ச், குலேம், கேஸில் ராக், லோண்டா, தார்வார், ஹூப்ளி, ஹாவேரி, ராணிபென்னூர், தாவங்கிரீ, பிரூர், அரசிகெரே, திப்தூர், தும்கூர், சிக் பனாவர், பானஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களின் வழியாக இந்த சிறப்பு ரயில் செல்லும் என்று கூறுகின்றனர்.

மற்றொரு ரயில் வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் (07359) வாஸ்கோடகாமாவில் இருந்து செப்டம்பர் 2ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7:10 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

திரும்பி செல்லும்போது, வேளாங்கண்ணி-வாஸ்கோடகாமா (07360) சிறப்பு ரயில் வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 4ஆம் தேதி காலை 9:15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடையும்.

மட்கான், சன்வெர்டாம் க்ரூச், குலேம், கேஸில் ராக், லோண்டா, தார்வார், ஹூப்ளி, ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தாவங்கிரீ, பிரூர், அர்சிகெரே, திப்தூர், தும்கூர், சிக் பனாவர், பானஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், பங்காரா ஆகிய ரயில் நிலையங்கள் நிறுத்தப்படும். ,ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களின் வழியாக இந்த சிறப்பு ரயில் செல்லும் என்று கூறுகின்றனர்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.