பிரதமர் மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து அவதூறாக ட்வீட்- காவலர் சஸ்பெண்ட்

பிரதமர் மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதற்காக கான்பூர் குற்றப்பிரிவு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் அஜய் குப்தா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகள் வெளியிட்டு வந்ததாகத் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்  ஆகியோரை குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த தகவல் காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
image
இதனிடையே அஜய் குப்தா, தான் பதிவிட்ட சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கினார். எனினும் அந்த பதிவுகளின் ஸ்கீரின்ஷாட் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரியை அவதூறாக பதிவிட்டது காவலர் அஜய் குப்தாதான் என்பதை உறுதிசெய்த காவல்துறை மேலிடம், அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறியதாக அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: DOLO 650 பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி பரிசளிப்பு- நீதிபதிகள் அதிர்ச்சி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.