உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் 775 மில்லியன் டாலர் நிதியுதவி… ஆயுதங்கள், டிரோன்கள், தளவாடங்கள் வாங்க உதவி

ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை கடந்த 6 மாதங்களாக உக்ரைன் சமாளித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு 775 மில்லியன் டாலர் அளவுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள், கண்ணிவெடி எதிர்ப்பு வாகனங்கள், ஹோவிட்சர் பீரங்கிகள் போன்றவை முதன்முறையாக உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளன.

உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் கண்ணிவெடி வைத்திருப்பதாக கூறப்படுவதால் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்கு உதவியாக இருக்கும் என அமெரிக்கா கருதுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.