உரசிய பாஜக; உச்சந்தலையில் கை வைத்த ஆம் ஆத்மி!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரது தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு மக்கள் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு திரும்பும் நித்தியானந்தா?; இறுகியது பிடி.. சீடர்கள் அதிரடி!

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மணிஷ் சிசோடியா, ‘சிபிஐயால் 2 அல்லது 3 நாட்களில் நான் கைது செய்யப்படலாம். மேலும், என்னுடைய செல்போன், லேப்டாப்பையும் எடுத்து சென்று விட்டனர். ஆனாலும் நாங்கள் பயப்பட போவதில்லை’ என கூலாகவே கூறி இருக்கிறார்.

எனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் நிலவி வரும் நிலையில், உரசி பார்த்த பாரதிய ஜனதா கட்சியின் உச்சந்தலையில் கை வைக்க ஆம் ஆத்மி துணிந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதாவது இந்த ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகிய இருவருமே குஜராத் மாநிலத்தில் முகாமிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முகாமின்போது குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் தரமான கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாக வழங்கப்படும், என்கின்ற வாக்குறுதிகளை அளித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

அதேப்போல் டெல்லியில் உள்ளதை போல தரமான மருத்துவமனைகளை குஜராத்தில் உருவாக்குவோம் என்பதை விளக்கும் வகையில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் இளைஞர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகிய இருவரது இந்த திடீர் முடிவு பாஜ மேலிடத்தை ரொம்பவே டென்ஷனாக்கி இருக்கிறது.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் இந்த முடிவு டெல்லி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி டெல்லியில் சிறப்பான நிர்வாகத்தை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பஞ்சாப் மாநில தேர்தலிலும் ஆம் ஆத்மி மகத்தான வெற்றியை பெற்றது.

இவ்வாறு வரிசையாக வெற்றிகளை ருசித்துவிட்டு அடுத்த எந்த மாநிலத்தில் இறங்கலாம்? என ஆவலோடு காத்திருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜகவே பாயை விரித்து குஜராத்துக்கு அழைப்பு விடுத்ததாகவே இந்த சிபிஐ சோதனை அமைந்துவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.