கீழக்கரை கடற்கரை ‘கிளீன்’ஆனது

கீழக்கரை: தினகரன் செய்தி எதிரொலியாக கீழக்கரையில் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது.கீழக்கரையில் கடற்கரை ஓரங்களில் சேதமடைந்த படகு மரத்துண்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து கடும் துர்நாற்றம் வீசியது. மேலும் கீழக்கரை கடல் பகுதியிலும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்ததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

இவற்றை உடனே அகற்ற வேண்டும் என தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக கீழக்கரை கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. இப்பணிகளை தூய்மை பணி ஆய்வாளர் பரகத்துல்லா ஆய்வு செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.