ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள்.. ராகுல், பிரியங்கா மரியாதை..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்த நாள் விழா இன்று (20-ம் தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “அப்பா, ஒவ்வொரு நொடியும் என்னுடன், என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன்” என்று பதிவிட்டு, ராஜீவ் காந்தி குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.