ஸ்மார்ட் சிட்டி ஊழல் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது

சென்னை: ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கை இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை அறிக்கையை ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதர் முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் கடந்த மே மாதம் குழு அமைக்கப்பட்டது. ஊழல் குறித்து விசாரித்த ஒரு நபர் ஆணையம், 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையில் முக்கியமாக ஸ்மார்ட் சிட்டி டெண்டர் முறைகேடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

கடந்த மே மாதம் பொறுப்பேற்றவுடனே, உடனடியாக தனது பணியைத் தொடங்கிய டேவிதார் அவர்கள், தனக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரிடம் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை, திருப்பூர், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், தஞ்சை, கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி ஆகிய 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொட்டித் தீர்த்த மழையால் தியாகராய நகர் ஸ்தம்பித்தது.

சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்றது. அதை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன, இதை விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அப்போது அறிவித்தார்.

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் தமிழகம் முழுவதும் நேரடியாக சென்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்தார்கள் உள்ளிட்டோர்களுடன் ஆய்வு செய்தது.

இதன் அறிக்கையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து தாக்கல் செய்த இந்த ஆணையத்தின் தலைவர், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பணிகளில் தொய்வு, முறைகேடு, யாருக்கெல்லாம் தொடர்பு, எங்கெல்லாம் இணைப்பு பணிகள் முழுமையாக முடியவில்லை என்பது குறித்து முதலமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.  

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.