“ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ”: மெட்ராஸை சுத்திகாட்டிய இசைப்புயல் அன்ட் கோ… 90’ஸ் கிட்ஸ் நாஸ்டாலஜிக்கல்

சென்னை: சென்னைவாசிகளுக்கு உற்சாகம் தரக்கூடிய ‘சென்னை தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது.

.சென்னையை பின்னணியாகக் கொண்டு தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் வெளியாகியுள்ளன.

அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில் இடம்பெற்ற ‘மெட்ராச சுத்தி பார்க்கப் போறேன்’ பாடல் குறிப்பிடத்தக்கது.

சென்னை தின ஸ்பெஷல் பாடல்

தமிழ்த் திரையிசையின் சிறப்பே, மனித வாழ்வின் இன்ப துன்பங்களைப் போல, பல சிறப்பு தினங்களுக்கும் எதாவது ஒரு பாடலை கொடுத்தது தான். ஹேப்பி நியூ இயர் முதல் கொண்டாட்டங்கள் நிறைந்த இப்படியான ஸ்பெஷல் பாடல்களின் எண்ணிக்கை ஏராளம். விரல்விட்டு சொல்லிவிட முடியாதபடி, எல்லவிதமான கொண்டாட்டங்களையும் தமிழ்த் திரையிசை பதிவுசெய்துள்ளது. அப்படி இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளியான ஒரு பாடலை, சென்னை தினத்துக்காகவே நினைவு கூறலாம்..

மெட்ராச சுத்தி காட்டப் போறேன்

மெட்ராச சுத்தி காட்டப் போறேன்

வினித், சோனாலி, மனோரமா நடிப்பில் 1994ல் வெளியான திரைப்படம் மே மாதம். வீனஸ் பாலு இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். மே மாதம் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே, ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. குறிப்பாக ‘மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்’ என்ற பாடல், தற்போதைய சென்னை தினத்தில் 90’ஸ் கிட்ஸ்கள் கொண்டாடக் கூடிய பாடல் என்றேக் கூறலாம்.

மனோரமா, ஸ்வர்ணலதா, சாகுல் ஹமீது

மனோரமா, ஸ்வர்ணலதா, சாகுல் ஹமீது

ரஹ்மான் இசையில் உருவான இந்தப் பாடலை, மனோரோமா, ஸ்வர்ணலதா, சாகுல் ஹமீது இவர்களுடன் ஜிவி பிரகாஷ் இணைந்து பாடியிருந்தனர். இப்பாடலில் வரும் சிறுவனுக்காக ஜிவி பிரகாஷ் குரல் கொடுத்திருந்தார். அவரைத் தவிர ‘மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்’ பாடலை பாடிய மனோரமா, ஸ்வர்ணலதா, சாகுல் ஹமீது மூவரும் இப்போது இல்லை என்பது வருத்தத்துக்குரியது. ரஹ்மான் இசையில் மனோரமா பாடிய ஒரே பாடலும் இதுவே.

வைரமுத்து வடித்த பாடல் வரிகள்

வைரமுத்து வடித்த பாடல் வரிகள்

வைரமுத்து எழுதியிருந்த ‘மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்’ பாடலின் வரிகள் அனைத்தும், அன்று மட்டும் இல்லாமல் இன்றைக்கும் சரியாக பொருள்படுகின்றன. “சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம், ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்.. பாரின் சரக்கு பர்மா பஜார், நம்ம உள்ளூர் சரக்கு ஜாம் பஜாரு” என்ற இந்த வரிகள் சமகாலத்துக்கும் நச்சென்று பொருந்தும்.

மெட்ரோ வாட்டர், மினரல் வாட்டர்

மெட்ரோ வாட்டர், மினரல் வாட்டர்

அதேபோல், சென்னையில் நிரந்தரமாகிவிட்ட தண்ணீர் பிரச்சினயையும் வைரமுத்து கச்சிதமாக பயன்படுத்தியிருப்பார். “மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர், ஆனா ஸ்டைலுன்னா இப்போ குடி மினரல் வாட்டர்… மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான், ஆல் இன் ஆல் கேட்டான் ஒரு போட்டோ போட்டோ கையில்தான்” என வரிக்கு வரி அமர்க்களம் செய்திருப்பார்.

சென்னை தினத்தின் நாஸ்டாலஜிக்கல்

சென்னை தினத்தின் நாஸ்டாலஜிக்கல்

சென்னையை பற்றி பல பாடல்கள் வந்திருந்தாலும், ரஹ்மானின் துள்ளல் இசையில் மனோரமா, ஸ்வர்ணலதா, சாகுல் ஹமீது, ஜிவி பாடியிருந்த இப்பாடல், 90’ஸ் கிட்ஸ்களின் நாஸ்டாலஜிக்கல் என்றால் அது மிகையல்ல. ‘மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்’ பாடல் படமாக்கப்பட்ட விதமும், இப்போது பார்த்தாலும் மனதுக்குள் ஒரு பரவசம் பற்றிக்கொள்ளும், அதுவே இப்பாடலின் சிறப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.