G20 உச்சிமாநாடு…ரஷ்யாவிற்கு தார்மீக உரிமை இல்லை: பிரித்தானியா அறிவிப்பு


  • G20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யாவிற்கு தார்மீக உரிமை இல்லை.
  • புடின் G20 உச்சிமாநாடு கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் ரிஷி சுனக் கருத்து.

உக்ரைன் மீதான தாக்குதலை புடின் தொடருவதால், நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யாவிற்கு தார்மீக உரிமை இல்லை என்று பிரித்தானியாவின் செய்திதொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட 176 நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் உயிரிழந்து இருப்பதுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் என பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.

G20 உச்சிமாநாடு...ரஷ்யாவிற்கு தார்மீக உரிமை இல்லை: பிரித்தானியா அறிவிப்பு | Russia Has No Moral Right To Attend G20 Uk SaysEPA

இந்தநிலையில் உக்ரைன் மீதான கொடூரமான தாக்குதலை புடின் ராணுவம் தொடர்ந்து வருவதால் இந்தோனேசியா தலைநகரம் பாலியில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள G20 நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யாவிற்கு தார்மீக உரிமை இல்லை என பிரித்தானியாவின் செய்தி தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இவரது இந்த கருத்து, பிரித்தானியாவின் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்கின், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை G20 உச்சிமாநாடு கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்ற அறிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது.

G20 உச்சிமாநாடு...ரஷ்யாவிற்கு தார்மீக உரிமை இல்லை: பிரித்தானியா அறிவிப்பு | Russia Has No Moral Right To Attend G20 Uk SaysGetty

இதுத் தொடர்பாக ரிஷி சுனக் தெரிவித்த கருத்தில், எங்கள் G20 கூட்டாளிகள் புடினின் அருவருப்பான நடத்தையை வெளியேற்றும் கூட்டுப் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

மேலும் தூங்கும் போது குழந்தைகள் படுக்கையிலேயே கொல்லப்படுவதற்கு புடின் பொறுப்பாக இருக்கும்போது அவருடன் ஒரு மேஜையில் உட்கார்ந்து கொள்வது கடினம் எனத் தெரிவித்து இருந்தார்.

கூடுதல் செய்திகளுக்கு: போரின் ஆட்டத்தை மாற்றியமைக்கும் புதிய ஆயுதங்கள்: உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா திட்டம்

இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி புடினும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் பாலி மாநாட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே இருவரும் செப்டம்பர் மாதம் சந்திக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.