ரூ.15,000-க்குள் தரமான 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க முடியுமா?

உலகில் நாளுக்குநாள் தொழில்நுட்பத்தில் ஏரளமான வளர்ச்சி காணப்படுகிறது, இதில் மக்களின் தேவையை கருத்திற்கொண்டும் அவர்களது ஆர்வத்தை தூண்டும் வகையிலும் சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பல்வேறு வசதிகள் நிரம்பிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகின்றன.  2ஜி, 3ஜி, 4ஜி என்று கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதில் பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  ஸ்மார்ட்போன்களின் வசதிகளில் வளர்ச்சி இருப்பது போல அவற்றின் விலைகளிலும் வளர்ச்சி அதிகரித்து தான் வருகிறது.  பல தொழில்நுட்பங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனை மக்கள் பயன்படுத்த விரும்பினாலும், அவற்றை தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப வாங்க திட்டமிடுகின்றனர்.  இப்போது இந்தியாவில் ஒருவர் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருக்கும் பட்ஜெட் சுமார் ரூ. 15,000 ஆக இருக்குமானால், அந்த தொகைக்குள் அவர்களால் நல்ல ஸ்மார்ட்போன்களை வாங்குவது கடினமானது.

5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியின் காரணமாக அவற்றை பட்ஜெட் தொகையில் வாங்க நினைப்பது இயலாத ஒன்று என்று கூறப்படுகிறது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பார்க்கும்பொழுது சந்தையில் ரூ. 10,000க்கு கீழ் உள்ள ஸ்மார்ட்போன் மற்றும் சப்-15000 பிரிவு அனைத்து முக்கிய பிராண்டுகளும் இந்த விலைகளை முறியடிக்க முயற்சித்தது.   இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டில் நாம் பார்க்கும்பொழுது இந்தியாவில் மக்கள் ஸ்மார்ட்போன்களை ரூ. 10,000 பட்ஜெட் தொகைக்குள் வாங்க திட்டமிட்டிருந்தார்கள், ஆனால் அந்த சமயத்தில் உண்மையாக இந்த பட்ஜெட் தொகைக்குள் அவர்களுக்கு நல்ல தரமான ஸ்மார்ட்போன்கள் கிடைத்தது.  ஆனால் தற்போது இந்த 2022 ஆம் ஆண்டில் பட்ஜெட்டுக்குள் வாங்கவேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  ஏனெனில் இப்போது நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டுக்குள் ஸ்மார்ட்போன்கள் இல்லை.  தற்போது இந்தியா பெரும்பாலும் சீனாவின் தயாரிப்புகளான சியோமி, ரெட்மி, போக்கோ, விவோ, ஓப்போ, ரியல்மி போன்றவை தான் அதிகளவு ஆதிக்கம் செலுத்திவருகின்றன.

தற்போதைய சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு பல முன்னணி பிராண்டுகள் குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை.  அதிகரித்து வரும் செலவுகள், பண ஏற்ற இறக்கமான, சிப் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் இந்திய சந்தையில் ரூ.20,000க்கும் அதிகமான அளவில் ஸ்மார்ட்போன்களை களமிறக்குவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அதேசமயம் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களின் வரவால் இந்த நிலை மேலும் மோசமடைந்துவிட்டது எனலாம், இனிமேல் இந்தியாவில் ரூ.10,000க்குள் தரமான 5ஜி ஸ்மார்ட்போன்களை உங்களால் வாங்கமுடியாது.   சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் ரூ.12,000க்குள் 5ஜி ஸ்மார்ட்போன்களை எதிர்காலத்தில் இந்திய சந்தையில் களமிறக்கும் என்றாலும் அதற்கு அரசு தடை விதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.