Tamil news today live: சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குகிறது மத்திய அரசு – அரவிந்த் கெஜ்ரிவால்

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும், டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பக்க அறிக்கையை அளித்துள்ளது. மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை அளித்துள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா தைராய்டு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்

சென்னையில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை இயக்க திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.  அரசு பேருந்துகளுக்கு காப்பீடு செய்வது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்

Live Updates
15:12 (IST) 21 Aug 2022
இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் தமிழகம் வருகை

பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் தமிழ்நாடு வந்துள்ளனர்.

தனுஷ்கோடி அருகே மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கைக்குழந்தையுடன் தவித்த 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

14:44 (IST) 21 Aug 2022
எதிர்க்கட்சிகளை முடக்குகிறது மத்திய அரசு – அரவிந்த் கெஜ்ரிவால்

காலை எழுந்ததும் சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குகிறது மத்திய அரசு – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிபிஐ பிறப்பித்தற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்து உள்ளார்

பணவீக்கம், வேலையில்லாமல் இளைஞர்கள் திண்டாடி வரும நிலையில் மத்திய அரசு காலை எழுந்தவுடன் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குகிறது எனத் தெரிவித்தார்.

13:32 (IST) 21 Aug 2022
காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்

புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரை மாற்றக்கோரி கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதால் பரபரப்பு. ஆலோசனை கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வர் நாராயசாமி பாதியில் வெளியேறினார்.

12:36 (IST) 21 Aug 2022
“3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு”

தமிழகத்தில் வரும் 23, 24, 25ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

12:21 (IST) 21 Aug 2022
டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் இன்று காலை 11 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல்

11:39 (IST) 21 Aug 2022
அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்கள் வருகை இன்றி வெறிச்சோடியது

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்கள் வருகை இன்றி வெறிச்சோடியது . அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் ஒரு மாதம் வரக்கூடாது என்ற உயர்நீதிமன்றம் உத்தரவு நேற்றுடன் முடிவு தொண்டர்கள் வர வேண்டாம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்.

09:27 (IST) 21 Aug 2022
18 வயதை கடந்தவர்களில் 96.99% பேர் முதல் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

தமிழகத்தில் 27 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம். 18 வயதை கடந்தவர்களில் 96.99% பேர் முதல் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

09:26 (IST) 21 Aug 2022
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க சிபிஐ சார்பில் லுக் அவுட் நோட்டீஸ். புதிய மதுக் கொள்கை முறைகேடு தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது குற்றச்சாட்டு முறைகேடு புகாரில் மணீஷ் சிசோடியா வீட்டில் அன்மையில் சோதனை நடத்திய நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் .

08:42 (IST) 21 Aug 2022
தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் . தமிழகம் முழுவதும் இன்று 34வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

08:42 (IST) 21 Aug 2022
“Happy Streets” நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர்

“HAPPY STREETS” நிகழ்ச்சி குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை “Happy Streets” நிகழ்ச்சி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விளையாட்டு, பாட்டு, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.