Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்!

சென்னை: துப்பாக்கி சத்தங்களின் இரைச்சல்களால் கடுப்பாகி இருந்த ரசிகர்களுக்கு சீதா ராமம், திருச்சிற்றம்பலம் போன்ற மெல்லிய காதல் கதை படங்கள் ஆறுதல் அளித்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.

Thiruchitrambalam Movie Review | Yessa ? Bussa ? | திருச்சிற்றம்பலம் | Dhanush|*Review

பெரிய பட்ஜெட் படங்களை பார்க்கத்தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் என்கிற மாயையும் திருச்சிற்றம்பலம் உடைத்துள்ளது.

படம் நல்லா ஜாலியா இருந்தாலே போதும், ரிலாக்ஸா பார்த்து விட்டு போகலாம் என ரசிகர்கள் தியேட்டர்களில் திருச்சிற்றம்பலம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு

நீண்ட நாட்களுக்குப் பிறகு

நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்காக ஒரு படம் தனது கரியருக்காக ஒரு படம் என மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டே இருந்தார். ஆனால், திடீரென ஒரே ட்ராக்கில் ஆக்‌ஷன், அடிதடி சண்டை என சென்றதுமே படங்கள் சரியாக போகவில்லை. இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு படு ஜாலியான ஒரு ரொமான்டிக் படத்தை கொடுத்து வெற்றியை ருசி பார்த்துள்ளார்.

மித்ரன் ஜவகர் மேஜிக்

மித்ரன் ஜவகர் மேஜிக்

யாரடி நீ மோகினி படத்தில் பண்ண அதே மேஜிக்கை இயக்குநர் மித்ரன் ஜவகர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு திரையில் செய்துள்ளதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்கின்றனர். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர் என குறிப்பிட்ட சில திறமையான நடிகர்களை மட்டுமே வைத்துக் கொண்டு திரைக்கதை மற்றும் வசனங்களை வலுவாக அமைத்து ரசிகர்களை தியேட்டரில் சிரிக்கவும் அழவும் வைத்துள்ளார்.

கூடுதல் காட்சிகள்

கூடுதல் காட்சிகள்

திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், மக்கள் கூட்டம் கூட்டமாகவும் குடும்பம் குடும்பமாகவும் படத்தை பார்க்க தியேட்டருக்கு படையெடுத்து வருவதால், கூடுதல் காட்சிகளை பல தியேட்டர்கள் அதிகரித்து கல்லா கட்டி வருகின்றன.

மூன்றாம் நாள் வசூல்

மூன்றாம் நாள் வசூல்

திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் 9 கோடியும் உலகளவில் 11 கோடியும் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டாம் நாளான நேற்று திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் மொத்தமாக 10 கோடி வந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு நாட்களில் ஒட்டுமொத்தமாக 21 கோடி ரூபாய் வரை திருச்சிற்றம்பலம் வசூலித்தது. இந்நிலையில், மூன்றாம் நாளான நேற்று 10.80 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 30 முதல் 32 கோடி வரை படத்துக்கு வசூல் வந்துள்ளதாக கூறுகின்றனர்.

வாத்திக்கு வெயிட்டிங்

வாத்திக்கு வெயிட்டிங்

திருச்சிற்றம்பலம் வெற்றியைத் தொடர்ந்து வாத்தி படத்தை சீக்கிரமே ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளனர். வரும் டிசம்பர் மாதமே வாத்தி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள நானே வருவேன் உள்ளிட்ட படங்களும் தியேட்டரில் வெளியாகி கலெக்‌ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.