அக்டோபர் மாதத்தில் எரிசக்தி கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும்? பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாகும் தகவல்


விலைவாசி உயர்வால் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது எரிசக்தி கட்டண உயர்வும் பேரிடி

கொரோனா ஊரங்கில் இருந்து நாடுகள் மீண்டு வர எரிவாயு தேவை அதிகரித்து விலை உச்சவரம்பும் அதிகரிப்பு

பிரித்தானியாவில் சரிசக்தி கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் நிலையில், அக்டோபரில் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அக்டோபர் 1 முதல் 3,553.75 பவுண்டுகள் என்ற விலை வரம்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டுமின்றி, மேலும் கட்டணங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் எரிசக்தி கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும்? பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாகும் தகவல் | Energy Prices Exact Amount Predict

இந்த இலையுதிர் காலத்தில் எரிசக்தி விலை வரம்பு எவ்வளவு அதிகரிக்கும் என்பதை எதிர்வரும் 26ம் திகதி Ofgem அறிவிக்க உள்ளது.
திருத்தப்பட்ட கட்டணமானது அக்டோபர் 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும்.

ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது எரிசக்தி கட்டண உயர்வும் பேரிடியாக மாற உள்ளது.
இதுமட்டுமின்றி, அக்டோபர் முதல் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை எரிசக்தி கட்டணத்தை திருத்தவும் Ofgem முடிவு செய்துள்ளது.

இதனால் இனி முதல் எரிசக்தி கட்டணம் அதிகரிக்கவே அதிக வாய்ப்பு என கூறப்படுகிறது.
மேலும், அக்டோபரில் 3,553.75 பவுண்டுகள் என்ற விலை வரம்பானது ஜனவரி மாதம் £4,649.72 எனவும் ஏப்ரல் மாதம் £5,341.08 எனவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் எரிசக்தி கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும்? பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாகும் தகவல் | Energy Prices Exact Amount Predict

கொரோனா ஊரங்கில் இருந்து நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து எரிவாயு தேவையும் அதிகரித்ததை அடுத்து விலை உச்சவரம்பு அதிகரித்து வருகிறது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பாவுக்கான எரிசக்தி வழங்கலை ரஷ்யா மொத்தமாக குறைத்துள்ளதும் இந்த நெருக்கடிக்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.