இனி எண்ணெய்-க்கும், தங்கத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை..!!

உக்ரைன் போருக்கு பின்பு இந்தியா ரஷ்யா மத்தியிலான வர்த்தக விரிவாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வேகமாகச் சரக்குகளை டெலிவரி செய்யும் ஈரான் வாயிலான வர்த்தகப் பரிமாற்றம் பெரிய அளவிலான லாபத்தையும், வர்த்தகத்தையும் உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிமுகம் செய்த முக்கியமான கட்டமைப்பு தான் இந்த ரூபாய் வாயிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு ரூபாய் வாயிலான பணப்பரிமாற்ற முறை.

இந்த முறையின் கீழ் வர்த்தகம் செய்யத் தற்போது ரஷ்ய தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பெரிய அளவிலான ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்ய வங்கிகள் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

உண்மையில் தங்கம் விலையில் என்ன தான் நடக்குது.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

உக்ரைன் போருக்கு பின்பு இந்தியா – ரஷ்யா மத்தியில் வர்த்தகம் செய்ய வல்லரசு நாடுகள் தடை உத்தரவுகளை அறிவிக்காத ரஷ்ய வங்கிகள் வாயிலாகப் பணப் பரிவர்த்தனைகள், ஏற்றுமதிக்கான வங்கி உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நிலைமை மொத்தமாக மாற்றியுள்ளது.

ரூபாய் வாயிலான பேமெண்ட்

ரூபாய் வாயிலான பேமெண்ட்

ஆர்பிஐ ரூபாய் வாயிலான பேமெண்ட்-ஐ ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு அனுமதி அளித்து அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டு வந்த நிலையில் இருந்து இந்தியா உடன் வர்த்தகம் செய்யும் உலக நாடுகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ரஷ்ய நிறுவனங்களுக்கு.

ரஷ்ய வங்கிகள்
 

ரஷ்ய வங்கிகள்

தற்போது இந்திய வங்கிகளிடம் சுமார் 15க்கும் அதிகமான ரஷ்ய வங்கிகள் உள்நாட்டு நாணயங்களில் தத்தம் நாட்டு நிறுவனங்கள் வர்த்தகம் செய்யும் வங்கி கணக்குகளை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் டாலர்-ஐ மட்டும் நம்பியிருக்கும் நிலையிலும், சர்வதேச வர்த்தகத் தடைகளும் நீக்கப்பட்டு வர்த்தகம் அதிகமாகும்.

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியா

ரஷ்யாவின் Petersburg Social Commercial Bank, Zenit Bank மற்றும் Tatsotsbank ஆகியவை ஆர்பிஐ அறிவிக்கப்பட்ட சேவையின் கீழ் புதிய வங்கி கணக்குகளைப் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, யூகோ வங்கி ஆகியவை உருவாக்க பேச்சுவார்த்தையில் இருதரப்பும் இறங்கியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

மேலும் இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு வர்த்தகம் செய்ய ஏதுவாகச் சூழ்நிலையை உருவாக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் ரஷ்யாவின் மத்திய வங்கி தினமும் இரு நாட்டு நாணயங்களுக்கான எக்ஸ்சேஞ்ச் ரேட் அறிவிக்கும். இதை அடிப்படையாக வைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான தொகையைச் செலுத்தலாம்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

வல்லரசு நாடுகள் உடனான தடையில் சிக்கியுள்ள Centro Credit Bank, Bank Soyuz மற்றும் MTC Bank ஆகியவையும் இந்தியாவில் எஸ்பிஐ, இண்டஸ்இந்த் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யெஸ் வங்கி ஆகியவற்றுடன் சிறப்பு வங்கிகளை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆர்பிஐ-யில் உள்நாட்டு நாணய பரிமாற்ற முறை வல்லரசு நாடுகளின் தடையை உடைத்துள்ளது.

தங்கம், கச்சா எண்ணெய்

தங்கம், கச்சா எண்ணெய்

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கவும், அன்னிய செலாவணி இருப்பு குறைக்கவும் மிகவும் முக்கியமான காரணமாக இருப்பது தங்கம், கச்சா எண்ணெய் தான். இந்த உள்நாட்டு நாணய பரிமாற்ற முறை மூலம் தள்ளுபடி விலையில், அதுவும் ரூபாய் வாயிலாகப் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russian banks opening accounts with Indian banks; Big boom for gold and oil imports

Russian banks opening accounts with Indian banks; Big boom for gold and oil imports இனி எண்ணெய்-க்கும், தங்கத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை..!!

Story first published: Monday, August 22, 2022, 11:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.