சந்தேக நபர்களை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

பொல்துவ சந்தியில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மை நடவடிக்கையில் ஈடுபட்ட பலரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஜூலை 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பில் மேல் மாகாண (தெற்கு) குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 23 சந்தேகநபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது கட்டுப்பாடற்ற முறையில் நடந்துகொண்டமை தொடர்பாக வீடியோ காட்சி படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடாக தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.
0112 829 388
071 30 64 165
071 85 92 209

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.