மிகக்குறைந்த விலை, அசத்தல் அம்சங்கள்: இந்தியாவின் டாப் மின்சார கார்களின் பட்டியல் இதோ

மலிவான மின்சார கார்கள்: வரப்போகும் காலம் மின்சார வாகனங்களுக்கான காலம் என பலர் கூறி நாம் கேட்டு வருகிறோம். ஆனால், தற்போது பெட்ரோல்-டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதால், மக்கள் அவற்றை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இருப்பினும், குறைந்த விலையிலும் பல நல்ல மின்சார வாகனங்கள் கிடைக்கின்றன. நீங்கள் மின்சார வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், உங்கள் பட்ஜெட்டில் வரக்கூடிய சில சிறந்த மின்சார வாகனங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். காரின் விலை, அடிப்படை விவரக்குறிப்புகள் மற்றும் ரேஞ்ச் என அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம். இந்த கார்கள் அனைத்தும் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 300 கிமீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரம் வரை செல்லும் திறன் கொண்டவை.

டாடா டிகோர் இவி

Tata Tigor EV-ன் விலை 12.49 லட்சத்தில் தொடங்குகிறது. இது 26 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் மற்றும் 55 kW (74.7 PS) மோட்டாரைப் பெற்றுள்ளது. டாடாவின் இந்த கார் 0 முதல் 60 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் எட்டிவிடும். இது 306 கிமீ தூரம் வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது.

மேலும் படிக்க | புதிய மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி வாங்கும் முன் இந்த 5 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள் 

டாடா நெக்ஸான் இவி பிரைம்

Tata Nexon EV பிரைமின் விலை ரூ.14.99 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த மின்சார காரில் 30.2 kwh லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இந்த கரை ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 1 மணி நேரத்தில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். அதன் வரம்பைப் பொறுத்தவரை, இது 312KM வரம்பைக் கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்

இது Tata Nexon EV Prime இன் பெரிய பேட்டரி பேக் பதிப்பாகும். இது 40.5 kWh லி-அயன் பேட்டரியைப் பெறுகிறது. இந்த கார் 437 கிமீ தூரம் செல்லும். இதன் விலை ரூ.18.34 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இது நெக்சான் இவி ப்ரைமை விட சில கூடுதல் அம்சங்களையும் கொண்டுள்ளது.

MG ZS EV

MG ZS EV ஆனது 44-kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம், 50 நிமிடங்களில் 0 முதல் 80 சதவீதம் வரை இதை சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 419 கிமீ தூரம் வரை இது செல்லும். இதன் விலை ரூ 20.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

ஹூண்டாய் கோனா இவி

ஹூண்டாய் கோனா இவி எஸ்யுவி-யின் விலை 23.79 லட்சத்தில் தொடங்குகிறது. இது 39.2 kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ வரை செல்லும். வேகமான சார்ஜர் மூலம், ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

மேலும் படிக்க | அதிக மைலேஜ்.. குறந்த விலை: புதிய பைக்கை களமிறக்கும் பாஜாஜ் 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.