சுகமான தூக்கத்திற்கு! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

உடம்பிற்கு காற்று, தண்ணீர், உணவு எவ்வளவு அவசியமோ அந்தளவிற்கு துாக்கமும் அவசியமே. நமது வாழ்க்கையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு துாக்கத்தில் கழிந்து விடுகிறது. இந்த முக்கியமான செயலுக்கு நாம் சற்று கவனம் செலுத்துவது அவசியம்.

முதுமையில் துாக்கம் சற்று குறைவது உண்மையே. முதுமையில் சுமார் 5- 8 மணி நேரத் துாக்கமே போதுமானது. துாக்கத்தின் மொத்த நேரத்தை விட, ஆழ்ந்த தொடர் தூக்கம் தான் (deep uninterrupted) மிகவும் அவசியம்.

முதுமையில் ஏற்படும் தூக்கக் கோளாறுகள்

  • துாக்கத்தின் தரம் குறைந்துவிடுதல்.

  • ஆரம்ப நிலை தூக்கம் வர அதிக நேரமாதல்.

  • ஆழ்நிலை தூாக்கம் குறைதல்.

  • இரவு நேரங்களில் துாக்கம் விடுபடுதல்.

  • அதிகாலையில் விழித்துக் கொள்ளுதல்.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

காரணங்கள்

  • எத்தனை நேரம் தான் டிவி பார்ப்பது அல்லது பேப்பர் படிப்பது. காலத்தைக் கடத்த பகலில் துாங்கிவிடுவது.

  • வயதாகிவிட்டது இனிமேல் உடற்பயிற்சி எல்லாம் தேவையில்லை என்ற ஊதாசினம்.

  • மனநோய்கள் துாக்கதை வராமல் தடுக்கும். உதாரணம்: மன அழுத்தம், டிமென்சியா என்னும் மறதி நோய்

  • நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளினாலும் துாக்கம் தடைபடலாம். உதாரணம்: நீர் மாத்திரை

  • மனக்கவலைகளினாலும் தூக்கம் குறையும். உதாரணம். உறவினர்களின் இழப்பு, கடன் தொல்லை, நிதி வசதி குறைவு, தனிமை.

  • இரவில் காபி அல்லது மது அருந்துவது துாக்கத்தை கெடுக்கும்.

  • பல வித நோய்களினாலும் துாக்கம் குறையும். உதாரணம்: மூட்டு வலி, ஆஸ்த்துமா, இதய பலவீனம், வயிற்றில் புண், உதறுவாதம், பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் (ஆண்களுக்கு மட்டும்).

முதுமையில் ஒருவருக்கு இரவில் தூக்கம் குறைந்தாலும், துாக்கத்தின் அவசியம் (need for sleep) குறைவதில்லை.

துாக்கம் என்பது ஒவ்வொருவருடைய உடல்நலம் மற்றும் மனநிலையைப் பொறுத்ததே. ஆனால், முதுமையில் துாக்கம் சற்று குறைவது உண்மையே. துாக்கத்தின் அளவு ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபட்டு இருக்கும். முதுமையில் சுமார் 5லிருந்து 8 மணி நேரத் துாக்கம் போதுமானதே. துாக்கத்தின் மொத்த நேரத்தைவிட, ஆழ்ந்த தொடர் தூக்கம் தான் (uninterrupted) மிகவும் முக்கியம்.

புதிய ஆய்வின்படி, முதுமைக்காலத்தில் குறைந்த துாக்கம் போதுமென்ற கருத்தை மருத்துவ விஞ்ஞானிகள் மறுத்து இருக்கிறார்கள். அதாவது, முதுமைக்காலத்தில் ஒருவர் பகலில் செய்யும் வேலையைப் பொறுத்தே அவருடைய துாக்கம் அமைகிறது. பகலில் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு அதிக நேரம் ஆழ்ந்த துாக்கம் தேவைப்படுகிறது. மாறாக, பகல் முழுவதும் படுத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இரவில் குறைவான துாக்கமே போதுமானது.

துாக்கம் குறைவதால் உடல் சோர்ந்துவிடும். பசி குறையும். அதனால், உண்ணும் உணவின் அளவு குறைய அவருடைய எடையும் குறையும். தலைவலி, தலைபாரம் போன்றவையும் வரலாம். நல்ல துாக்கம் இல்லாதவர்கள், பகலில் மிகுந்த எரிச்சலுடன் இருப்பார்கள்.

முதுமை

நல்ல தூக்கத்திற்கு கீழ்கண்ட வழிமுறைகளை (Sleep hygiene) தவறாமல் பின் பற்றினால் நல்ல துாக்கம் உங்களை ஆறத் தளுவிக் கொள்ளும்.

  • பகலில் துாக்கம் 30 40 நிமிடங்கள் போதும்.

  • மாலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

  • தூக்கத்தை கெடுக்கும் மாத்திரையை தவிர்க்கவும் அல்லது மாலையிலேயே எடுத்துக் கொள்ளவும், உதாரணம் : நீர் மாத்திரை

  • புகை பிடித்தலை இரவு 8.00 மணிக்கு மேல் கூடவே காபி, மது

கூடாது.

  • படுப்பதற்கு முன்பு வெந்நீரில் குளித்து விட்டு வெது வெதுப்பான பால் அருந்தினால் நல்ல தூக்கம் வரும்.

  • வெதுவெதுப்பான பாலில் இரண்டு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் பொடி செய்யப்பட்ட கசகசாவை கலந்து சாப்பிட்டால் நல்ல துாக்கம் வரும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

  • தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு செல்ல வேண்டும்.

  • படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் சற்று மங்கிய வெளிச்சத்திலிருப்பது நல்லது.

  • படுக்கும் இடத்தை துாங்குவதற்கு மட்டும் பயன்படுத்தவும்.

  • படுக்கை அறையில் டிவி பார்ப்பதையோ, புத்தகம் படிப்பதையோ அல்லது வானொலி கேட்பதையோ தவிர்ப்பது நல்லது.

  • படுத்த உடனே 30 – 45 நிமிடங்களுக்குள் துாக்கம் வரவில்லையென்றால் வெளியே சென்று சற்று நடந்து விட்டு வரலாம் அல்லது படிப்பது, வானொலி கேட்பது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். தூக்கம் வர ஆரம்பித்தவுடனேயே படுக்கைக்கு சென்று விட வேண்டும்.

  • மன ஊளைச்சல்களும், கவலைகளும் துாக்கத்தின் எதிரிகள், அதை தவிர்க்க சுமார் அரை மணி நேரம் தியானம் செய்து விட்டு படுக்கைக்குச் சென்றால் ஆழ்ந்த தூக்கம் நிச்சயம்.

சுமார் 70 வயது மேற்பட்டவர்களுக்கு பல தொல்லைகளினால் சிரமப்படும் பொழுது மன அமைதிக்கான மாத்திரையோ (Tranquilizer) அல்லது துாக்க மாத்திரையோ (Sedative) டாக்டரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது தவறில்லை.

துாக்க மாத்திரை

நல்ல தூக்கத்துக்கு துாக்க மாத்திரை ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. தூக்க மாத்திரையை தினமும் சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும். மாத்திரையின் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். மாத்திரையை திடீரென்று நிறுத்தினால், துாக்கம் பாதிக்கப்படும். துாக்க மாத்திரையினால் ஞாபகசக்தி குறையும். உடல் தடுமாறும், கீழே விழ வாய்ப்புகள் அதிகமாகும். பகலில் மயக்க நிலையை ஏற்படுத்தும். ஆகையால், முடிந்த அளவுக்கு துாக்க மாத்திரையைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்படி மன அமைதியைக் கொடுக்கும் மாத்திரையைச் சாப்பிடுவதால், கெடுதல் அதிகம் வருவதில்லை.

Representational Image

துாக்கமின்மைக்கு நோய்கள் ஏதேனும் காரணமாக இருந்தால், அதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். பகல் துாக்கத்தைக் குறைத்து, மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இரவில் குறைந்த உணவு, படுப்பதற்கு முன்பு தியானம், சிறிது வெதுவெதுப்பான பால், அமைதியான சூழ்நிலையில் மனதை ஒருநிலைப்படுத்தி துாங்க முயற்சிக்க வேண்டும். நாளடைவில் நல்ல உறக்கத்தைப் பெற்று, காலையில் எழுந்தவுடன் புத்துணர்ச்சி பெறுவீர்கள்; மகிழ்ச்சி அடைவீர்கள்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.