துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
இந்த பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள். ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.