2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்: நிதிஷ்குமாரை முன்னிறுத்த ராஷ்டிரிய ஜனதா தளம் விருப்பமா?

டெல்லி: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஏற்று கொண்டால் பிரதமர் பதவிக்கு  நிதிஷ்குமார் வலிமையான வேட்பளராக இருப்பார் என்று பீகார் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகாரில் பாரதிய ஜனதா உடன் உறவை துண்டித்து கொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பதவியை தக்க வைத்து கொண்டிருக்கிறார். அவரது அரசில் துணை முதலமைச்சராக பதவி வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி பீகாரில் எதிர் கட்சிகள் ஒன்றுபட்டு இருப்பது தேசிய அளவில் ஒற்றுமைக்கான முன்அறிவிப்பு என்றும் வர்ணித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பளராக நிதிஷ்குமார் நிறுத்தப்படலாம் என்ற யுகத்திற்கு அவர்தான் பதில் அளிக்கவேண்டும் எனவும் தேஜஸ்வி கூறினார். ஆனால் எதிர் கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டால் நிதிஷ்குமார் நிச்சயமாக வலிமையான பிரதமர் வேட்பளராக இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். 50 ஆண்டுகளாக சமூக அரசியல் போராளியாக இருக்கும் நிதிஷ்குமார், ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கம் மற்றும் இடஒதுக்கீட்டு இயக்கங்களில் பங்கெடுத்தவர் 37 ஆண்டுகள் பரந்த நாடாளுமன்ற நிர்வாக அனுபவம் பெற்றவர் சகா அரசியல் தலைவர்களிடையே நன்மதிப்பை பெற்றிருப்பவர் என்றும் தேஜஸ்வி புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.