5ல் ஒரு இளைஞருக்கு வேலையில்லை.. சீனாவின் மோசமான நிலை.. இந்தியா பரவாயில்லையோ?

சீனாவில் பரவிய கொரோனா காரணமாக கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஏற்கனவே மந்த நிலையினால் பாதிக்கப்பட்ட சீனா, தற்போது இன்னும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதோடு தொழில் துறையில் சீன அரசின் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்தியில், அங்கு இன்னும் மோசமான நிலையே இருந்து வருகின்றது.

பொருளாதார மந்த நிலை, நிலக்கரி பற்றாக்குறை, கடும் மின்வெட்டு, சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசி என பல காரணிகளுக்கு மத்தியில் வேலையிழப்பும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பல சீன நிறுவனங்களும் வளர்ச்சியில் தாக்கத்தினை எதிர்கொண்டு வருகின்றன.

பயமுறுத்தும் சீனா.. மனிதர்களுக்கு மட்டும் அல்ல மீன்-களுக்குக் கொரோனா டெஸ்ட்..!

பல  நிறுவனங்களுக்கும் பிரச்சனை

பல நிறுவனங்களுக்கும் பிரச்சனை

சமீபத்திய காலமாக சீனாவின் முன்னணி நிறுவனங்கள் கூட பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. குறிப்பாக சீனாவின் முக்கிய வணிகமாக இருந்து வரும் ரியல் எஸ்டேட் துறையை சார்ந்த எவர்கிராண்டே நிறுவனம், திவால் நிலையை எதிர்கொண்டுள்ளது. இது மட்டும் சீனாவின் முன்னணி நிறுவனங்கள் பலவும் வளர்ச்சியில் சரிவினை எதிர்கொண்டுள்ளன.

பணி நீக்கம்

பணி நீக்கம்

சில தினங்களுக்கு முன்பு சீனாவின் டெக் ஜாம்பவான் நிறுவனமான ஜியோமி, தனது ஊழியர்களில் 800க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் சீன தொடர்ந்து மந்த நிலையில் உள்ளதையே அறிய முடிகிறது. இது மேலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

5ல் ஒருவருக்கு வேலையில்லை
 

5ல் ஒருவருக்கு வேலையில்லை

இதற்கிடையில் வளர்ச்சியினை புதுபிப்பதும், ஊக்குவிப்பதும் அவசியமான ஒன்று என சீனா நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்தில் வேலையின்மை விகிதமானது 16 – 24 வயதிற்கு இடையில், 19.9% ஆக இருந்தது என சீனாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 5ல் ஒரு இளைஞர் வேலையில்லாமல் இருக்கிறார் என்று புள்ளிவிவரம் மூலம் அறிய முடிகிறது.

வேலை  கிடைக்காமல் போகலாம்

வேலை கிடைக்காமல் போகலாம்

நடப்பு ஆண்டில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் வேலை தேடி சந்தைக்குள் நுழைவார்கள். ஆனால் தற்போது நிலைமை சரியில்லை. ஆக பட்டதாரிகளால் அவர்கள் விரும்பிய வேலையினை பெற முடியுமா? எனத் தெரியவில்லை என கான்பெர்ரா பல்கலைக்கழத்தின் இணைப் பேராசிரியரும், தொழிலாளர் நிபுணருமான சியோடோங் காங் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கலாம்

அதிகரிக்கலாம்

இதற்கிடையில் சீனாவின் பல முக்கிய நகரங்களில் மின் பற்றாக்குறையானது நிலவி வருகின்றது. இதனால் வணிகங்கள் மறும் தொழில் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வேலையினை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது மேற்கொண்டு வேலை இழப்பினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் நிலையோடு ஒப்பிடும்போது இந்தியாவின் நிலையானது நிச்சயம் பெட்டர் தான்.. நீங்க என்ன சொல்றீங்க

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: china job சீனா வேலை

English summary

1 in 5 Chinese youth unemployed: Experts warn unemployment could rise further

1 in 5 Chinese youth unemployed: Experts warn unemployment could rise further/5ல் ஒரு இளைஞருக்கு வேலையில்லை.. சீனாவின் மோசமான நிலை.. இந்தியா பரவாயில்லையோ?

Story first published: Monday, August 22, 2022, 17:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.