இரண்டாவது திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. மேக்னா ராஜ் என்ன செஞ்சாங்க தெரியுமா?

ஐதராபாத் : நடிகை மேக்னா ராஜ், தமிழ், கன்னடம் என நடித்து பிரபலமானவர். தமிழில் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கன்னட நடிகர் சிரஞ்சீவ சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018ல திருமணம் செய்துக் கொண்டார். இதனிடையே இரண்டு ஆண்டுகளிலேயே அவர் மரணமடைந்தார்.

சிரஞ்சிவி இறந்தபோது மேக்னா கர்ப்பமாக இருந்தநிலையில் உலகமே இருண்டதாகத்தான் மாறியது.

நடிகை மேக்னா ராஜ்

நடிகை மேக்னா ராஜ் தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து புகழ் பெற்றார். தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்து இவர் பிரபலமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் கடந்த 2018ல் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.

காதல் திருமணம் செய்த மேக்னா

காதல் திருமணம் செய்த மேக்னா

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை இவர் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவரையே திருமணம் செய்துக் கொண்டார். இதனிடையே மேக்னா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 2020ல் மாரடைப்பால் சிரஞ்சீவி மரணமடைந்து திரையுலகினருக்கு அதிர்ச்சி கொடுததார்.

கணவர் மரணம்

கணவர் மரணம்

சிரஞ்சீவி இறக்கும்போது மேக்னா கர்ப்பமாக இருந்த நிலையில், சில மாதங்களில் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ராயன் என்று பெயரிட்டார் மேக்னா. தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவர் ஆக்டிவாக காணப்படுகிறார். சிரஞ்சீவியின் இறப்பிற்கு இது சிறந்த வடிகாலாக அவருக்கு இருந்தது.

 இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

தன்னுடைய ரசிகர்களிடம் தன்னுடைய பர்சனல் வாழ்க்கையில் நடந்து வரும் மாற்றங்கள், தன்னுடைய மகன் குறித்த பல விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்துக் கொண்டு வருகிறார் மேக்னா. ரசிகர்களும் அவருக்கு தொடர்ந்து ஆறுதல் அளித்து வந்தனர். தைரியத்தை ஊட்டினர்.

மேக்னா இரண்டாவது திருமணம்?

மேக்னா இரண்டாவது திருமணம்?

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. தான் அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், தான் எந்த முடிவை எடுத்தாலும் சிரஞ்சீவி தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று அவர் கூறியதாகவும்கூட தகவல்கள் வெளியாகின.

திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

இந்நிலையில் இந்த திருமண வதந்திகளுக்கு தன்னுடைய சிறப்பான ஒரு செய்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மேக்னா. அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஒரு புகைப்படம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அந்த புகைப்படத்தில் தன்னுடைய மறைந்த கணவர் மற்றும் மகன் இருவரின் பெயர்களையும் தன்னுடைய கையில் மேக்னா டாட்டூவாக குத்தியுள்ளது காட்டப்பட்டுள்ளது.

மேக்னா டாட்டூ

மேக்னா டாட்டூ

தன்னுடைய மறைந்த கணவன் மற்றும் மகன் ராயன் ஆகியோரின் பெயர்களை தன்னுடைய இடது கையில் டாட்டூ குத்தியுள்ளார் மேக்னா ராஜ். இந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு அவர் எண்ட் கார்ட் போட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.