Tamil news today live: விநாயகர் சதுர்த்தி; கோயில்களில் சிறப்பு பூஜை

Go to Live Updates பெட்ரோல் –டீசல் விலை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி கோலாகலம் இன்று விநாய்கர் துர்த்தி கொண்டப்படுவதால், நெல்லை, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. விநாய்கர் பூக்காளால் அலங்கரிக்கப்பட்டு, வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது. விநாயகர் சிலைகளை கரைக்க தடை தருமபுரி, ஒகேனக்கல் பகுதியில் காவிரி … Read more

இரு சக்கர வாகன விபத்து மரணம்.. தமிழகம் முதலிடம்.!

கடந்த ஆண்டு இருசக்கர வாகன விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.  கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகள் மற்றும் அவற்றால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண பிரிவு ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி,  கடந்த ஆண்டில் நாடு முழுவதும் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 622 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவற்றில் இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்பட்ட மரணம்தான் அதிகம். இந்த விபத்துகளில் 69 ஆயிரத்து 240 பேர் … Read more

ஓ.பி.எஸ், ராதாகிருஷ்ணன் மிஸ்ஸிங்: ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை குறித்து பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன?

சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சசிகலாவின் உறவினரும் மருத்துவருமான சிவக்குமார் உள்ளிட்டவர்களை அரசு விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக, தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தின் செய்திக் குறிப்பில் வெளியான தகவல் தமிழ்நாடு அரசியல் அரங்கில் பரபரப்பரைப் பற்றவைத்துள்ளது. 2016 செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, அங்கேயே உடல் நலன் குன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து … Read more

துணைவேந்தர் நியமனம் மாநில அரசின் உரிமை – சென்னையில் நடந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள், துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும். துணைவேந்தர் நியமனம் என்பது மாநில அரசின் உரிமை என்று துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது: கலை, அறிவியல், இசை, விளையாட்டு, கல்வியியல், தமிழ் வளர்ச்சி, சட்டம், பொறியியல், மருத்துவம் என தனித்தனி சிறப்பு பல்கலைக்கழகங் கள் அதிகம் … Read more

சந்திரபாபு நாயுடு திறந்து வைத்த அண்ணா கேன்டீன் மீது தாக்குதல்

குப்பம்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது குப்பம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பஸ் நிலையம் அருகே கட்சி சார்பில் ‘அண்ணா கேன்டீனை’ அவர் திறந்து வைத்தார். ஆனால், அவர் திறப்பு விழா நடத்துவதற்கு முதல் நாள் இரவே, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலவை உறுப்பினர் பரத் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், அங்கிருந்த பேனரை கிழித்து, அண்ணா … Read more

கோப்ரா படம் எப்படி இருக்கு? விமர்சனம்!

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் நடித்த கோப்ரா படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.  கடைசியாக விக்ரம் நடித்த மஹான் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி உள்ள கோப்ரா படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர்.  மிகப்பெரிய பொறுசெல்வில் இப்படம் உருவாகி உள்ளது.  விக்ரம் படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படமாக பார்க்கப்படுகிறது.  கோப்ரா படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான், மிர்னாலினி ரவி போன்றோர் நடித்துள்ளனர்.  கோப்ரா … Read more

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக உள் பகுதிகளின் மேல் நிலவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று காலை வரை, மிக கன மழை பெய்யும். நாளை கன மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினூக் ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதை நிறுத்துவதாக அமெரிக்க ராணுவம் அறிவிப்பு

வாஷிங்டன்: சினூக் ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதை நிறுத்துவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. சினூக் ரக ஹெலிகாப்டர்களில் அடிக்கடி தீப்பிடிப்பதை அடுத்து அமெரிக்க ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

போலீஸ் இன்பார்மராக செயல்பட்டதால் ஆத்திரம் பஞ். துணை தலைவரை கொன்ற மாவோயிஸ்ட்: தெலங்கானாவில் பதற்றம்

திருமலை: தெலங்கானாவில் போலீஸ் இன்பார்மராக செயல்பட்டதாக ஆத்திரமடைந்த மவோயிஸ்டுகள், பஞ்சாயத்து துணை தலைவரை கடத்திக்கொன்று சடலத்தை கிராமத்தில் வீசினர். மேலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கடிதம் வைத்திருந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், கொத்தகூடம் மாவட்டம், செர்லா மண்டலம், குர்னப்பள்ளி கிராம பஞ்சாயத்து துணை தலைவர் இர்பா ராமாராவ். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு மாவோயிஸ்டு இயக்கத்தை  சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். இரவு நேரத்தில் அவரது மனைவி கனகம்மாவை எழுப்பி, ராமராவை தங்களுடன் அழைத்து … Read more

ஆளில்லா டிரோன்களை பறக்கவிட்ட சீனா.. வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய தைவான்!

International oi-Mathivanan Maran தைபே: தங்களது நாட்டு வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீனாவின் ஆளில்லா டிரோன்களை எச்சரிக்கை செய்யும் வகையில் தைவான் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டை ஆக்கிரமிப்பதில் சீனா பெரும் முனைப்பாக இருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை தைவான் தங்களது நாட்டின் ஒரு பகுதி என்கிறது. ஆனால் தைவானோ, நாங்களே உண்மையான சீனா; எங்கள் நாடு தனிநாடுதான் என்பதில் உறுதியாக உள்ளது. சீனா, தைவான் விவகாரத்தில் உலக நாடுகள் குழப்பமான நிலையில்தான் … Read more